வணக்கம் நண்பர்களே!
முதன் முறையாக ஒரு தொடர் எழுதவிழைகிறேன்...என்னால் நாட்குறிப்பு கூட சரியாக எழுத முடியாது/தெரியாது .. ஆகவே இது அனைவருக்கும் ஒரு சோதனை முயற்சி தான்...
மறந்து விடாதீர்கள்...இக்கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே!
ஏதேனும் பிழைகள் இருந்தால்..சுட்டிக்காட்டி.. தட்டிக் கொடுக்க தயங்காதீர்கள்...மிக்க நன்றி!
==================================================
அழகான ஒரு நந்தவனம்...ரோட்டோரத்துல ரெண்டு சைக்கிள் மட்டும் தெரியுது...உள்ள கொஞ்சம் எட்டிப்பார்த்தால்...
அட.. நானும் நதியாவும்.. பின்னணியில் பாடல்...
"சோலைகள் எல்லாம் பூக்களைத்தூவ சுகம் சுகம் ஆ அ..
குயில்களின் கூட்டம் பாக்களைப்பாட இதம் இதம் ஆ அ..
காதல் ஊர்வலம் இங்கே...
கன்னி மாதுளம் இங்கே... "
ஒலிக்க...
"ராஜா...ஏய்... ராஜாப்பயலே... இன்னுமாடா தூக்கம்... எழுந்திரி..."அம்மாவின் குரலுடன் வழக்கமான காலை...
"இன்னைக்கு திங்கட்கிழமை.. இன்னும் அஞ்சு நாள் ஓடனும் சனி ..ஞாயிறு வர.. "மனசு புலம்பியது...
~~~~~~~~~~~~~~~~~~
"இந்த நதியா..ரொம்ப நல்லப் பெண்ணா இருக்கா...ரொம்ப லவ் பண்ணுறேன்... நேத்து பாத்த பூக்களைப்பறிக்காதீர்கள் பட நினைவாகவே இருக்குடா.." நாந்தான்... என நண்பன் நாகராஜ் கிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன்...
தினமும் நானும் நாகராஜும் தான் பள்ளிக்கு ஒன்னாப்போவோம்...
அவன் இருக்கறது நாங்க இருக்கும் கிருஷ்ணாபுரத்துல இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துல இருக்கற ஊர்.. பள்ளிக்கூடம் ரெண்டு கிலோமீட்டர் தூரம்...வெங்கலம் என்கிற ஊர்ல இருக்கு.. பள்ளிக்கு ரெண்டு கிலோமீட்டர் நடந்து தான் போகனும்...
நாகராஜ் தினமும் எங்க வீட்டுக்கு வந்து என்னையும் கூப்பிட்டுக்கிட்டு தான் போவான்... நாங்க ரெண்டுப்பேரும் ஒரே க்ளாஸ்...5ம் வகுப்பு...'C' பிரிவு...
~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு சின்ன பிளாஷ்பேக்...
நான் 4ம் வகுப்பு வரைக்கும் நகரத்துல இங்லீஸ் மீடியத்துல தான் படிச்சுக்கிட்டிருந்தேன்...அப்பாவுக்கு மாற்றல் ஆகி கிருஷ்ணாபுரம் வரும் வரைக்கும்...
இது ரொம்ப சின்ன கிராமம்...
'வெண்கலம்' அரசு பள்ளி...தமிழ் மீடியத்துக்கு மாறுறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன்...ஆனா இப்போ சமாளிச்சுக்கிட்டேன்...
என் நிறம் கொஞ்சம் வெளுப்பு என்கிறதால என் கூட படிக்கற பசங்க எல்லாம்..என்னைய "வெள்ளையா"ன்னு சொல்லி கூப்பிடுவாங்க..
அதிலும்... நித்தின்ன்னு ஒரு நண்பன்..'வெள்ளையனே வெளியேன்னு' சொல்லி கோபப்படுத்துவான்....ஆறுதலுக்கு அந்த ஊர்க்கோவில் ஐயர் பையனும் கூட படிச்சான்.. ஆனா அவன் நிறத்துல வெள்ளைனாலும் அந்த ஊர்ல பிறந்து வளர்ந்தவன் கிறதால... நான் தான் அன்னியமா தெரிஞ்சேன்...
நகரத்துல இருந்தப்பக்கூட ஐயர் வீட்டுப்பசங்க பலர் என்னைய அவங்க ஆளுன்னே நினைச்சிருந்தாங்க.. அதுல என் ப்ரண்ட்ஸ்..கௌதம் ..வாசுன்னு ரெண்டு பேரு... நானும் கௌதமும் ரஜினி ஃபேன்ஸ்... ஆனா வாசு மட்டும் கமல் ஃபேன்...ஏன்னு கேட்டா... வாசு சொல்லுவான்.."ரஜினி சூத்தரவாள் டா... கமல் தான் நம்மாளுன்னு"... அதுக்கு அர்த்தம் தெரியாது...ஆனா அதிலிருந்து எனக்கே கமல் தான் பிடிச்ச நடிகரா தோனுனாறு.. அப்பாக்கிட்ட கூட கேட்டிருக்கேன்.. "சூத்தரவாள்ன்னா.. என்னப்பா...நாம ஐயருங்க கிடையாது..அப்ப நாம சூத்தரவா தானே"ன்னு இன்னைக்கு வரைக்கும் சொல்லலை.."பேசாம போடான்னு" சொல்லிடுவாரு..."சூத்தரவாள்ன்னா ஐயர் இல்லாதவங்கன்னு" நானே நினைச்சுப்பேன்... இந்த நினைப்பு எல்லாம் கொஞ்சம் சரியானது இந்த ஊர்... சூழ்னிலை.. மக்களால தான்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"டேய்.. கிளம்பலாம்டா" ந்னு நாகராஜ் கூப்பிட்டான்.. ரெண்டு பேரும் நடக்கத் தொடங்கினோம்...
அனேகமா தார்ரோடு வழியாத்தன் போவோம்.. சில நாட்கள் குறுக்கு வழியில் போவதுண்டு...தார்ரோட்டு வழியில் போகும் வழியே ...ரெண்டு மயான இடங்கள் வரும்.. சாலையோரம்...
அதையெல்லாம் கடந்து போனால்.. ஒரு வளைவில் பாலம் கடந்து போகனும்...
இன்னைக்கு அந்த பாலம் தெரியத் தொடங்கும் முன்னரே அங்க.. ஓரத்துல ...யாரே படுத்திருப்பது போல தெரிந்தது.......
தொடரும்...
ஞாயிறு, பிப்ரவரி 20, 2011
காதல் கிறுக்கல்கள்! - III
சித்தன்னவாசலின் ஓவியமே
சித்தனையும் சிதைக்கும் சிற்பமே...
அற்ப்பனாகிய என்னை
இரட்சிப்பாயா?
-------------------------
உன்
காதல் வேதங்கள் எத்தனை எத்தனை?
சொல்...காதலியே
நம் பேதங்கள் தீர...
-------------------------
நிலவுப்பெண்ணே... நிலவுப்பெண்ணே...
பூகோள பூமிப்பந்தை மறந்து
ஓர் நாள் என்னையும் சுற்றிவருவாயா?
நிலவுப்பெண்ணே.. நிலவுப்பெண்ணே...
தாமதிக்காமல் தன்னையே
தந்திட நினைக்கும்
என்னையும் ஓர் கனம் உணர்வாயா?
------------------------
உன்னை புனரவேண்டும்
எப்படி சொல்வது..
ஓ.. அன்பே
உன்னை
காதலிக்கிறேன்.
- யாரோ ஒருவர்
------------------------------
உன் உயிர் எடுக்க வேண்டும்
எப்படி செய்வது...
ஓ.. அன்பே
உன்னையே நான் கல்யாணம்
செய்துக்கறேன்
----------------------
முல்லைப்பூ மூக்குக்காரி, மூனாறு கூட்டிச் செல்லவா?
ரோசாப்பூ உதட்டுக்காரி, உத்தரவின்றி உள்ளே வரவா?
தாழம்பூ வாசனைக்காரி, தாமிரபரணி தண்ணீர் தரவா?
செவ்வந்திப்பூ மேனிக்காரி, செல்லச் சந்தம் சொல்லித் தரவா?
-----------------------------------------------

திங்கள், பிப்ரவரி 14, 2011
காதல் கிறுக்கல்கள்! - II
காலை குழம்பியில் இனிப்பு வேண்டாம்...
உன் இனிய புன்னகை போதும்!
சமையலில் காரம் வேண்டாம்..
உன் காரப்பார்வை போதும்!
சுட்டெரிக்கும் சூரிய கதிரில்.. நிழல் வேண்டாம்
ஜில்லிட வைக்கும் உன் அணைப்பு போதுமே!
மொத்தத்தில்
தினம் தினம் ...உன் முத்தத்தில் என் உயிர் வாழுமே!
---------------------------------------------------
காதலி... காதலி..
அனைத்தையும் காதலி...
ஆசை அடங்க காதலி...
இன்பமாக காதலி..
ஈகையாக இதயத்தை தந்து காதலி..
உள்ளம் உருக காதலி...
யாதும் ஊரே...யாவரையும் காதலி...
எங்கே சென்றாலும் காதலி..
ஏசினாலும் காதலி...
ஐயம் கொள்ளாமல் காதலி...
சாகும் வரை காதலி
சாவையும் காதலி!
-----------------------------
வெள்ளிக்கரண்டியுடன் பிறந்தவளே
உன் பார்வையால்
என்னை வெளிறிப்போக வைக்காதே!
-------------------------------------
மூச்சுக்காற்றால் வெப்பம் உண்டாக்கு
பருக்களின் கீற்றால் கீறல் உண்டாக்கு
உமிழ் நீரால் என் முகம் முழுக்க ஈரம் உண்டாக்கு
ஏன்...
ஒற்றைப்பார்வையால் எனக்கு பைத்தியம் கூட உண்டாக்கு
ஆனால்
என்னை வேண்டாம் என்ற ஒரு சொல்லில்
துன்பம் உண்டாக்காதே
பைங்கிளியே...
------------------------------------
உன் கருங்குயில் கண்ணுக்கு
கண்மை எதற்கு?
உன் ஸ்ட்ராபெர்ரி உதட்டுக்கு
சாயம் எதற்கு?
மொத்தத்தில்...
உன் சித்திர முகத்துக்கு
முகக்கவசம் எதற்கு?
உன் வெண்டை விரலுக்கு
சந்தணம் எதற்கு?
ஆனால் அழகே...
உன் அன்பு மனசுக்கு
நான் மட்டும் தானே உனக்கு!
---------------------------------
அனைவருக்கும் இனிய காதலர் தின நல் வாழ்த்துகள்!
ஞாயிறு, பிப்ரவரி 13, 2011
காதல் கிறுக்கல்கள்! - I
நான்.. நீ என்று சொன்னால்.. உதடுகள் ஒட்டாது...
நமீதா என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டும் -எங்கோ படித்தது!
----------------
காதல் ஹவாலா... நம்மிடையே இருப்பது
இது யாருக்கும் தெரியாத.. புரியாத
நம் இருவரின் கண்களின் பரிவர்த்தனை!
--------------------
சுவரை வைத்து தான் சித்திரம் தீட்ட முடியும்
அன்பே...என் மீது நீ வைக்கும் காதலால் தான்
என் வாழ்வை மீட்க முடியும்!
ஆதலால் உடனே காதலி... என் காதலி

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2009
புதுப்படங்கள் .,,, ஐந்து
1. மலையன்
கரண் நாயகனாக நடிக்கத் தொடங்கியதிலிருந்து அனைத்து படங்களிலும் ஒரு வித எதார்த்தமான கதைகளிலேயே ந்டிபபதால் அவரின் அனைத்து படங்களையும் தவறவிடுவதில்லை ... இதில் மொத்தமாக எதார்த்தமாகவே இல்லை .. நிறைய ஏமாற்றிவிட்டனர்.. கதையின் நாயகி நல்ல அழகு.. நன்றாக நடிக்கவும் செய்கிறார்..
சிவகாசி பட்டாசு தொழிற்கூடம் தான் கதையின் களம்.. அதிக செயற்கைத்தனமான காட்சிகள் .. சுலபத்தில் வில்லன் யார் எனவும் தெரிந்து விடுகின்றது ...
2. வாமணன்
ஜெய் நாயகனாக நடித்த இரண்டாவது படம் இது .. வித்யாசமாகத்தான் இருக்கிறது .. இருந்தாலும் நிறைய சொறிகின்றார்கள்.. இழுவைக்காட்சிகள் நிறைந்துள்ள படம்.. சந்தானம் , ஊர்வசி நகைச்சுவை காட்சிகள் கொஞ்சம் உட்கார வைக்கின்றது ... சொல்லிக்க்கொள்ளும்படி எதுவும் இல்லை..
3. ஐந்தாம் படை
முனியாண்டி குடும்பத்தார் படத்தின் சுமாரன் வெற்றி.. அதன் தாக்கத்தில் இந்தப் படம்.. ஐந்து அண்ணன் தம்பிங்களுக்குள் பாசம்.. இடையே சிம்ரன்.. சுந்தர் சி. மேல் விருப்பம் கொள்ள.. அவ்ருக்கேத் தெரியாமல் சுந்தர் சி.யின் அண்ணனுடம் திருமணம் நடக்கிறது ... இதில் சுந்தர் சி.யின் காதல் பட நாயகியுடன்..
இந்த சிக்கல்கள் எல்லாம் எப்படி அவிழ்கிறது.. எப்படி சகோரர்கள் ஒன்றினைகிறார்கள் ... என்பது மீதி...
விவேக் நகைச்சுவை.. சுமார் ரகம் .. பாடல்கள்.. இரண்டு பரவாயில்லை... சிம்ரன் குத்துப்பாடல் அருமை.. நடன அமைப்பும் நன்றாக இருக்கிறது
4. மோதி விளையாடு
ரொம்ப ஏமாற்றிய படம்... சரண் மிகவும் சொதப்ப்பிவிட்டார்.. கதையின் கரு மேல்வர்க்கத்தை ஒட்டு இருந்ததாலோ என்னவோ படம் காலின்னு கேள்விப்பட்டேன்
வினய் குரல் சுத்தமாக பொருந்தவில்லை... நாயகி பார்க்க மட்டுமே நன்றாக இருக்கிறார்.. நடிக்க சுத்த மா வரவில்லை ...
பாடல்கள் ஒன்றும் தேறவில்லை... பாதியிலேயெ கொட்டாவி வந்து விடுகிறது ...
5. அழகர் மலை
ஆர் கே அவர்கள் நாயகனாக நடித்த இரண்டாவது படம்.. வடிவேலு இருப்பதால் தான் இந்தப்படம் பார்தேன் .., அவர் ஏமாற்றவில்லை... நீண்ட நாட்களுக்குப்பின் முழு படத்திலும் வந்து கலக்குகிறார்.. வடிவேலுவின் ஜோடி... யார்ன்னு தெரியல.. ஆனா நல்லாக்கீறங்க.. ஹ்ஹி
இசை இசையராசாவா.. தேடினாலும் கிடைக்கல... பல பாடல்கள் .. முந்திய பாடல்களில் சாயல்.. மனசுல ஒட்டல..
தொடக்க பாடலில் இளைய ராஜாவே நேரடியாக நடித்துள்ளார்.. அந்த பாடல் சுமார் ரகம்...

வியாழன், ஏப்ரல் 09, 2009
திங்கள், பிப்ரவரி 16, 2009
திரு. கெளசிகனின் ஈழ உணர்வுப்பாடல்!
ஈழ மண்ணில் சமீபத்தில் தொடர்ந்து வரும் வன்முறைகளையும் அக்கிரமங்களையும் கன்டு திரு லீனாராய் அவர்களின் புதல்வன் திரு கௌசிகன் இசையமைத்த இப்பாடல் உள்ளம் உருக்குவதாக உள்ளது. இது முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை உலகமெங்கும் கொண்டுசெல்லும் நோக்கில் பாடி இருக்கிறார்.
ஞாயிறு, பிப்ரவரி 15, 2009
இரண்டாம் தேடல்...மறுபக்கம்.- நன்றி டுமீல்ஜி சார்!
இரண்டாம் தேடல்...மறுபக்கம்.......
இம்முறை பெண் பார்க்க வருவதாக மாப்பிள்ளை வீட்டில் இருந்து தகவல் வந்தது.
மாப்பிள்ளை பையன் புகைப்படம் கேட்டவில்லை. அப்போதே இது பஜ்ஜி,சொஜ்ஜி பார்ட்டியாக இருக்குமோ என ஒரு சந்தேகம்.நேரில் தான் பார்க்கனும் என கண்டிப்பாக சொல்லிவிட்டனர்..
பார்த்தீங்களா... இக்காலத்தை.. இன்னும் ஆண் வீட்டாரின் விருப்பப் படி தான் எந்த முடிவும் எடுப்பார்களாம்... ஒரு நல்ல சங்கதி... இதிலாவது நம் மக்கள் முன்னேறி இருக்காங்களே.. ஹிஹி
சரி விடயத்துக்கு வருவோம்..
மாப்பிள்ளை வீட்டார் விருப்பப்படி எங்களின் ஊருக்கு (மாயவரம்) வரும் நாள் தெரிவிக்கப்பட்டது...
அவர்கள் வருவதற்குள் மாப்பிள்ளை பற்றி நான் அறிந்து கொண்ட சங்கதிகளை சொல்கின்றேன்.
அவர் நல்ல வடிவாம்.. உயரம் கூட பொருத்தமாம்.. படிப்பு கணினியில் இளநிலைப் பட்டம் வாங்கியவர்.. படிப்பு முடிந்து அயல்நாட்டில் மணி புரிகிறாராம்.அவ்ளோ உலகளாவிய பரந்த குடும்பம்...
இதனைக் கேட்டதும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது... கல்லூரியில் ஒரு சீட்டை வீணாக்கியது போதும்.. ஏழைக்குடும்பப் ஆண்கள் பலர் வேலை கிடைக்காமல் படித்து விட்டு வீட்டிலேயே இருக்க... இந்த அயல்நாட்டுப் பணி நல்லதே.
இவ்ளோ தான் அவர்களைப் பற்றி தெரியும்.
வீட்டில் சாப்பாடெல்லாம் தயார் செய்வதாகக் கூறியிருந்தோம். அதனால் நல்ல கனிவுடனே தான் பேசினார்கள்.. அதெல்லாம் வேண்டாம் என ஒரு பிட்டும் போட்டார்கள்..இருந்தாலும் எல்லாம் முறைப்படி நடக்கட்டும்.. இருவருக்கும் பிடித்ததும்.. விருந்தெல்லாம் வைத்துக் கொள்ளலாம்... காபி மட்டும் போதும் ? என தகவல்.
காலை சிற்றுண்டியை மனதில் வைத்து விடியற்காலையிலேயே கிளம்பி விட்டார்கள்..... மாயவரத்திற்கு.. அங்கேயே பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இருந்த ஒரு நல்ல தங்கும் விடுதியில் தங்கினோம் என சொன்னார்கள். அங்கிருந்து எப்படி பெண் வீட்டிற்கு வரனும் எனபது பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டு... ஒரு வாடகை மகிழுந்தில் எம் வீட்டிற்கு வந்தார்கள்
அவர்களுடன் அவரது இளைய தாய்மாமாவும் வந்தார்... அவர் வழக்கறிஞர் என்பதை பிறகு அவரது விவரமான குறுக்கு விசாரணையில் கண்டுகொண்டோம்.ஒரு வழியாக எம் வீட்டாரைக் கண்டுபிடித்து வீட்டினுள் அடியெடுத்து வைத்தார்கள்... அனைவரும் வீட்டில் வரவேற்பு அறையில் அமர... எனக்கு மட்டும் வேர்த்துக் கொட்டியது.
கொஞ்சம் சமாளித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்... பொதுவான சங்கதிகள் பேசத் தொடங்கினார்கள்.. எங்கே வேலை... தற்போது நிலவரம் எப்படி... போன்ற கேள்விகள்.. எல்லாவற்றிக்கும் பதில்களை சொன்னார் மாப்பிள்ளை.. பின்னர் படிப்பு பற்றி பேச்சு திரும்பியது.. எந்த ஊரில் படிப்பு.. என்ன கல்லூரி... போன்ற மேலும் மேலும் கேள்விகள் தொடர...இது நாள் வரை வேலைக்குக் கூட இத்தனைக் கேள்விகள் அவரிடம் யாரும் கேட்டதில்லை போலும்.. ஒருவேலை கேட்டிருந்தால் என்ற என் கற்பனை குறும்பாக மலர்ந்தது. அத்துனைக் கேள்விகள்..
போதுமடா சாமி என்றாகி விட்டது போல் அவர் பட்ட தவிப்பு.. அடே அப்பா....
அவர் பதிலுக்குப்பின்னர் அதற்கு அவர்களின் நக்கல் நையாண்டி பேச்சுகள் வேறு... என் தந்தையாரும்..அவரின் அண்டை வீட்டு சினேகிதர்.. இருவர் மட்டும் தான்...வீட்டுப் பெண்டிர் அனைவரும் உள்ளே அமைந்து பார்த்துக் கொண்டிருந்தனர்..
அவரும் இடையிடையே... எபபத்தான் வாம்மா மின்னல் என ஜொள்லுவார்கள் என பதட்டமாக காத்திருந்தார்.(காரியத்தில் ரொம்ப கெட்டிடா நீ மச்சி... ஹிஹி).
தற்சமயம் தான் தட்டில் இனிப்பு காரம்..ரொட்டிகள் எல்லாம் வைத்து அனைவருக்கும் கொடுத்தார்கள்.. கொடுத்தது என் அம்மா... சஸ்பென்ஸ் தாளாமல் இதெல்லாம் எதற்குங்க... என்று வழிந்துவிட்டு.. சும்மா பெயருக்கு கொஞ்சம் இனிப்பை எடுத்து வாயிலும் தட்டில் மீதமிருந்ததை சட்டைப்பையிலும் போட்டுக்கொண்டார்.
அதற்குள் என் அப்பாவின் சினேகிதர் ...தனது மகனுக்கு பெண் பார்க்கும் நிகழ்வுகளைப் பற்றி அறுக்கத் தொடங்கி விட்டார்... அவரின் மகனுக்கு நன்கு படித்த பெண்ணும்.. ஆனால் வேலைக்கு செல்லாத.. சென்றேயில்லாத பெண்ணாக பார்ப்பதாகவும்.. சொன்னார்...அதனால் தமிழகத்து அனைத்து ஆண்மகன்களும் அவ்வாறு தான் எதிர் பார்ப்பதாகவும் நினைத்துக் கொண்டு...இந்த கதையை அவர் சொல்ல நான் ஆயிரம் முறை கேட்டதுண்டு.
எல்லாம் முடிந்து இப்போது தான் என்னை அழைத்தார் அப்பா.. நான் கையில் காபி தட்டுடன் சென்றேன்.
' நல்லா பார்த்துக்கோப்பா ' என்று அவர் அம்மா காதில் கிசுகிசுக்க... காபி தம்ளரை எடுக்கும் போது என்னை நேருக்கு நேர் பார்த்தார்... பிள்ளைப்பூச்சி..கொஞம் பூசினார் போல இருந்தார்.. அரவிந்த்சாமிபோல் வடிவாக இருந்தார்... சொல்லும்படி குறை எதுவும் இல்லை. ஆனால் உதட்டோரம் அநியாயத்திற்கும் ஓவர் ஜொள்.
அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு அங்கேயே ஒரு ஓரத்தில் நான் நிற்க...அவர் அம்மா, என்னை அங்கே உட்கார சொல்ல.. ஆண்கள் இருக்க முன்னிலையில் உட்காரும் வழக்கம் எங்கள் வீட்டில் இல்லை - என்று பெண்ணின் அப்பா சொன்னார்..என்னை விட்டால் அவர் மடியிலேயே அமர்ந்திருப்பேன். ஆனால் இது ஏற்கனவே நாங்கள் பேசிவைத்த விடயமாதலால் தவிர்த்தேன். ஒரு நிமிடம் கூட ஆகி இருக்காது... அதற்கு 'சரி.. நீ உள்ளே செல்லம்மா' என்று அனுப்பி விட்டார்கள்... ஒரே ஒரு முறைதான் பார்த்தேன்.. அவர் என்னைப் பார்த்தாரா எனவும் தெரியவில்லை.
மேலும் ஒரு கேள்வி 'என்ன பையனுக்கு நெற்றியின் அருகின் வீங்கின மாதிரி இருக்கு?' என அவர் நெற்றிக்கருகே இருந்த ஒரு சிறிய வடிவ கட்டியைப் பார்த்து அப்பா கேட்க...அவர் ஏதோ பதிலை சொல்லி சமாளித்தார்...
அப்பா.. தன் சினேகிதருடன் உள்ளே வந்தார் ..ஏப்பா இளங்கலைக்கே இந்த வீக்கம் என்றால் மாப்பிள்ளை முதுகலைவேறு படிப்பேன் என்கிறாரே..என்ன ஆகும் என கிசுகிசுத்தார்.எனக்கு ஓரளவு தெரிந்துவிட்டது... இதுவும் அவ்ளோ தான் என்று. ஆனால் அரவிந்த்சாமிக்கு அழகே அவர் முகத்தில் உள்ள மச்சம். அதுபோல் இவரது கவர்ச்சியே அந்த முன் மண்டை வீக்கம் தான் என்பதை நான் எப்படி அப்பாவிற்கு புரியவைப்பேன்.
எல்லாம் முடிந்து, சரி ஊருக்கு சென்று கலந்தாலோசித்துவிட்டு சொல்கின்றோம் எனச் சொல்லி அவர்கள் விடை பெற்றார்கள். அதற்குள் முதலில் பஜ்ஜி சாப்பிட்ட பெண்ணின் அப்பா கைத்தொலை பேசியில் அழைக்க மாப்பிள்ளையின் 'டிமாண்டு' எனக்கு தெரிந்தது. ஆனால் அப்பாவுக்கு.....
எனக்கு மனம் மிக வேதனையாக இருந்தது. இவ்வளவு அழகான மாப்பிள்ளை அதுவும் அறிவு வீங்கப்பெற்ற மாப்பிள்ளை தவறுமோ என கவலை. ம்...பெண்ணாகப்போனேன்... பெற்றோர் சொல் கேட்கனும்..இல்லையெனில் அவரைக் கடத்திக்கொண்டுபோய் கை பிடித்திருக்கலாமே....

இரண்டாம் தேடல்...
முதல் தேடலுக்கான பதிலுக்கு காத்திருக்கும் சமயத்திலேயே மற்றொரு பெண் பார்க்கும் படலம் தொடங்கியது.
இந்த முறை ரொம்ப சுவாரசியமா... பெண்ணின் படமோ.. என் படமோ பெண்ணின் தந்தையாரின் விருப்பப்படி நாங்கள் அனுப்பி பார்த்துக் கொள்ளவில்லை... நேரில் தான் பார்க்கனும் என கண்டிப்பாக சொல்லிவிட்டனர்..
பார்த்தீங்களா... இக்காலத்தை.. முன்பெல்லாம் ஆண் வீட்டாரின் விருப்பப் படி தான் எந்த முடிவும் எடுப்பார்களாம்... ஒரு நல்ல சங்கதி... இதிலாவது நம் மக்கள் முன்னேறி இருக்காங்களே.. ஹிஹி
சரி விடயத்துக்கு வருவோம்...
பெண் வீட்டாரின் விருப்பப்படி நாங்கள் அவர்களின் ஊருக்கு (மாயவரம்) பயணப்பட்டோம்.. அங்கே செலவதற்குள் பெண்ணைப் பற்றி நான் அறிந்து கொண்ட சங்கதிகளை சொல்கின்றேன்.
பெண் நல்ல வடிவாம்.. உயரம் கூட பொருத்தமாம்.. படிப்பு கணினியில் முது நிலைப் பட்டம் வாங்கியவர்.. படிப்பு முடிந்து இரு ஆண்டுகள் முடிந்தும் வீட்டிலேயே வைத்திருக்கின்றார்கள்...கேட்டால், வேலைக்கு அனுப்புவதில்லை... அவ்ளோ கட்டுபெட்டியான குடும்பம்... படிக்கக்கூட உள்ளூர் கல்லூரியிலேயே...
இதனைக் கேட்டதும் ரொம்ப வேதனையாக இருந்தது... கல்லூரியில் ஒரு சீட்டை வீணாக்கிவிட்டனரே.. ஏழைக்குடும்பப் பெண்கள் பலர் சீட்டு கிடைக்காமல் பலர் இருக்க்.. படித்து விட்டு வீட்டிலேயே இருக்க... எதற்கு இந்த வீண் வேலையோ...
இவ்ளோ தான் அவர்களைப் பற்றி தெரியும்.
இந்த முறை பெண்ணின் வீட்டிற்கே செல்வதாக திட்டம்...
வீட்டில் சாப்பாடெல்லாம் தயார் செய்வதாகக் கூறினார்கள்.. நல்ல கனிவுடனே தான் பேசினார்கள்.. அதெல்லாம் வேண்டாம்.. எல்லாம் முறைப்படி நடக்கட்டும்.. இருவருக்கும் பிடித்ததும்.. விருந்தெல்லாம் வைத்துக் கொள்ளலாம்... காபி மட்டும் போதும் என்று அம்மா சொல்லி வைத்துவிட்டார்.
விடியற்காலையிலேயே கிளம்பி விட்டோம்... மாயவரத்திற்கு.. அங்கேயே பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இருந்த ஒரு நல்ல தங்கும் விடுதியில் தங்கினோம். அங்கிருந்து எப்படி பெண் வீட்டிற்கு வரனும் எனபது பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டு... ஒரு வாடகை மகிழுந்தில் பெண் வீட்டிற்கு சென்றோம்.
எங்களுடம் என் இளைய தாய்மாமாவும் வந்தார்... அவர் கொஞ்சம் பிற்போக்கு வாதி (இந்த பிற்போக்கான தமிழகத்தில் இவர் தான் சரியானவர்!) என்றாலும் வழக்கறிஞர் ஆகையால் நல்லா பேசக்கூடியவர்... விவரசாலி... முதல் முறை பெண் பார்க்கையில் கொஞ்சம் சொதப்பி விட்டதால் இந்த முறை அவரையும் சேர்த்துக் கொண்டோம்.
ஒரு வழியாக பெண் வீட்டாரைக் கண்டுபிடித்து வீட்டிலுள் சென்றோம்... அனைவரும் வீட்டில் வரவேற்பு அறையில் அமர... எனக்கு மட்டும் வேர்த்துக் கொட்டியது.
கொஞ்சம் சமாளித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்... பொதுவான சங்கதிகள் பேசத் தொடங்கினார்கள்.. எங்கே வேலை... தற்போது நிலவரம் எப்படி... போன்ற கேள்விகள்.. எல்லாவற்றிக்கும் பதில்களை சொன்னேன்.. பின்னர் படிப்பு பற்றி பேச்சு திரும்பியது.. எந்த ஊரில் படிப்பு.. என்ன கல்லூரி... போன்ற மேலும் மேலும் கேள்விகள் தொடர...
இது நாள் வரை வேலைக்குக் கூட இத்தனைக் கேள்விகள் என்ன்னிடம் யாரும் கேட்டதில்லை.. அத்துனைக் கேள்விகள்..
போதுமடா சாமி... என்றாகி விட்டது...
என் பதிலுக்குப்பின்னர் அதற்கு அவர்களில் நக்கல் நையாண்டி பேச்சுகள் வேறு... பெண்ணின் தந்தையாரும்..அவரின் அண்டை வீட்டு சினேகிதர்.. இருவர் மட்டும் தான்...வீட்டுப் பெண்டிர் அனைவரும் உள்ளே அமைந்து பார்த்துக் கொண்டிருந்தனர்..
நானும் இடையிடையே... எப்பத்தான் பெண்ணை அழைப்பார்கள் என்றும் பார்த்திருந்தேன் (காரியத்தில் ரொம்ப கெட்டிடா நீ மச்சி... ஹிஹி).
தற்சமயம் தான் தட்டில் இனிப்பு காரம்..ரொட்டிகள் எல்லாம் வைத்து அனைவருக்கும் கொடுதார்கள்.. (கொடுத்தது பெண்ணின் அம்மாவாம்)... இதெல்லாம் எதற்குங்க... என்று வழிந்துவிட்டு.. சும்மா பெயருக்கு கொஞ்சம் இனிப்பை எடுத்துக் கொண்டேன்.
அதற்குள் பெண்ணின் அப்பாவின் சினேகிதர் ...தனது மகனுக்கு பெண் பார்க்கும் நிகழ்வுகளைப் பற்றி அறுக்கத் தொடங்கி விட்டார்... அவரின் மகனுக்கு நன்கு படித்த பெண்ணும்.. ஆனால் வேலைக்கு செல்லாத.. சென்றேயில்லாத பெண்ணாக பார்ப்பதாகவும்.. சொன்னார்...
அதனால் தமிழகத்து அனைத்து ஆண்மகன்களும் அவ்வாறு தான் எதிர் பார்ப்பதாகவும் நினைத்துக் கொண்டு...தன் நண்பரின் மகளையும் அப்படியே வைத்துக் கொண்டுள்ளார் போலும்.
எல்லாம் முடிந்து இப்போது தான் பெண்ணை அழைத்தார் பெண்ணின் அப்பா.. பெண்ணானவர் கையில் காபி தட்டுடன் வந்தார்(ள்)...
' நல்லா பார்த்துக்கோப்பா ' என்று என் அம்மா காதில் கிசுகிசுக்க... காபி தம்ளரை எடுக்கும் போது பெண்ணை நேருக்கு நேர் பார்த்தேன்...
கொஞம் பூசினார் போல இருந்தார்.. அதனால் உயரம் ரொம்ப குறைவாகத் தெரிந்தது... சொல்லும்படி வடிவும் இல்லை.
அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு அங்கேயே ஒரு ஓரத்தில் பெண் நிற்க...அம்மா, பெண்ணை அங்கே உட்கார சொல்ல.. ஆண்கள் இருக்க முன்னிலையில் உட்காரும் வழக்கம் எங்கள் வீட்டில் இல்லை - என்று பெண்ணின் அப்பா சொன்னார்..
ஒரு நிமிடம் கூட ஆகி இருக்காது... அதற்கு 'சரி.. நீ உள்ளே செல்லம்மா' என்று அனுப்பி விட்டார்... ஒரே ஒரு முறைதான் பார்த்தேன்.. பெண், என்னைப் பார்த்தாரா எனவும் தெரியவில்லை.
மேலும் ஒரு கேள்வி 'என்ன பையனுக்கு நெற்றியின் அருகின் வீங்கின மாதிரி இருக்கு?' என என் நெற்றிக்கருகே பிறந்தது முதல் இருந்த ஒரு சிறிய வடிவ கட்டியைப் பார்த்து ...பதிலை நான் சொல்லியவுடன்... பெண்ணின் அப்பா.. தன் சினேகிதருடன் உள்ளே சென்று கிசுகிசுத்தனர்.. எனக்கு ஓரளவு தெரிந்துவிட்டது... இதுவும் அவ்ளோ தான் என்று :-(
எல்லாம் முடிந்து, சரி ஊருக்கு சென்று கலந்தாலோசித்துவிட்டு சொல்கின்றோம் எனச் சொல்லி விடை பெற்றோம்.
அதற்குள் முதலில் பார்த்த பெண்ணின் அப்பா கைத்தொலை பேசியில் இன்னும் ஒரு வாரம் கால அவகாசம் கேட்டார்... வேறு பையனைப் பார்க்க இருப்பதாக அரசல் புரசலாக எங்களுக்குத் தெரிந்ததால்.. அதுவும் இல்லை என்றாகிவிட்டது.
இன்னும் இருப்பது ஒன்றே ஒன்று தான்... எனக்கும் விடுப்பும் ஒரு வாரம் கழிந்து விட்டது.. இன்னும் இருப்பதும் ஒரு வாரம் தான்.
அடுத்த படலத்திற்கு காத்திருப்போம்..
(தொடரும்...)

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)