திங்கள், நவம்பர் 27, 2006

காதல் கல்வெட்டுகள் - 2

முதலில், அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!
--------------
அது ஒரு கோடைக்காலம்... பள்ளித் தேர்வுகள் எல்லாம் முடிந்து சிறைப் பறவைகளாகிய நாங்கள் சிறகடித்து விண்ணில் பறக்கக் காத்திருக்கும் தருணம்.

நாமும் அந்த காலத்திற்கு செல்வோமா?

இன்று கடைசித் தேர்வு... வரலாறு-புவியியல். வாழ்க்கையிலேயே எனக்கு ரொம்பப் பிடித்த, பத்தி பத்தியாக கதை எழுதும் தேர்வு. வழக்கமாக அறிவியல் தேர்வு முடிந்தால் எல்லாம் முடிந்து விட்ட ஒரு திருப்தி.
வழக்கம் போல ஒன்னுமே படிக்காமல், கொஞ்சம் கூட நோகாமல், நல்லா தூங்கி எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் நல்ல ஒரு குளியல் போட்டுவிட்டு, சூடான பொங்கல்...தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டுவிட்டு என் செல்ல சைக்கிளை மெல்ல மிதித்து பள்ளிக்கு பயணிக்க ஆரம்பித்தேன்!

அட.. என்னங்கடா இது வழியில் பார்க்கும் ஈசல்கள் எல்லாமே அழகாகத் தெரிகிறது இன்னைக்கு....ஹிஹி!

தெரு முனையைக் கடந்து சாலையைத் தொடும் அந்த வேளை...
இரு விண்மீன் களை பதித்து செய்த மின்னலடிக்கும் கண்களைக் கொண்ட ஒரு நிலாப் பெண் என் கண்களுக்குள் நுழைத்து...இதயம் வரைக்கும் ஊடுறுவது எனக்கு நன்றாகவே தெரிந்தது...!

இதுக்கு மேலே என் கால்கள் நகர மறுத்தன... கைகளும் ப்ரேக் பிடிக்க மறுத்ததால், சைக்கிள் சென்று கொண்டே இருந்தது, என் மனம் என்னைவிட்டு எப்போதோ பறந்து போயிருந்த்து!

தேர்வு எழுதினேனோ இல்லையோ, சீக்கிரமாகவே வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.
எங்கே அந்த தேவதை? எங்கே அந்த பொற்சிலை? எங்கள் தெருவைச் சுற்றி தேடித் தேடி ஒரு பத்து சுற்றாவது சுற்றியிருப்பேன். கிடைக்கவில்லை!

கண்கள் திறந்த பார்த்த பொழுது மணி ஆறைத் தொட்டிருந்தது!... வாசலில் என் நண்பன் குரல்.

'டேய் மாம்ஸ்...இன்னைக்கு காலையில ஒரு தேவதையை பார்த்தேன்டா நம்ம தெருக் கோடியில. யாராச்சும் புதுசா குடி வந்திருக்காங்களா?'

'அடப்பாவி, உன் கண்ணுக்கு மட்டும் எப்படிடா இதெல்லாம் கரெக்டா மாட்டுது? எனக்குத் தெரியலை... யாருன்னு பார்க்க்லாம் வா'

இருவரும் அப்படியே பேசிக் கொண்டே வெளியே நடந்தோம்.

அதே நிலாப்பெண்... தன் குட்டித் தம்பியுடன் எங்களை க்ராஸ் செய்து சென்றது. 'மச்சி அவ தான்டா..' 'அந்த தேவதை...'

'ஆமான்டா.. நான் இப்பத்தான் பார்த்தேன், யாரா இருக்கும்..'

ஒல்லிக்குச்சி உடம்புக்காரி பாடலில் வரும் அதே பெண்போல சாயல்... மஞ்சள் நிற பாவாடை சட்டையில்...இரட்டைப் பின்னல் சடை,,,
அவளின் ஓட்டத்துடன் கலந்த நடையில் ஒயிலாட்டம் ஆட, நான் அப்படியே மெய் மறந்து அங்கே நின்றேன்!

'அக்கா.... அக்க்கா..' - கத்திக் கொண்டே ஒரு சிறுவன்... ஆமாம் இவன் நேற்று வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பொறை மோர் வாங்கிச் சென்றானே...

ஓ... அப்போது தான் நினைவுக்கு வந்தது. எங்கள் வீட்டுக்கு இருவீடு தாண்டி இருக்கும் வீட்டுக்கு புதுசா வந்தவங்க தானா...இது...!
-------------------

ஒரு நாளைக்கு எப்படியாச்சும் ஒரு முறையாவது அவளை நான் பார்த்துவிடுவேன்.

இன்னைக்கு எப்படியாச்சும் அவளிடம் பேசிடனும் என நினைத்துக் கொண்டு வெளியே நடந்தேன். சொல்லி வைத்தது போல அவளே நேரில் வந்து கொண்டிருந்தாள்.

உள் மனம் ...படபட வென அடித்துக் கொண்டிருந்தது!

மீரா சீயக்காய் போட்டு தலைக் குளித்திருப்பால் போலும்... என்னே ஒரு நறுமணம்... பட்டுக்கூந்தல் காற்றில் ஆட என் முன்னே நிஜ தேவதை...

'ஹலோ, ஆன்டி இருக்காங்களா?'
(மனசுக்குள் : அடிப்பாவி...அதுக்குள்ள உனக்கு ஆன்டி ஆகிட்டாங்களா... அம்பளை நானே இன்னும் முடிவு பண்ணல...)

என்ன ஒரு இனிமையான ராகத்துடன் கூடிய குரல். பாடினா காதில் இன்பத்தேன் வந்து பாயுமே...!

அது ஏன் தமிழ்பெண்கள் யாரும் பெரிய பாடகராக ஆக முடிவதில்லை...?!! சரி சரி, நான் எப்படியும் ஒரு நாள் பெரிய இசையமைப்பாளரா ஆகத்தானே போறேன். அப்ப என் மனைவிக்கு (என் தேவதை) சான்ஸ் கொடுக்காமல் வேற யாருக்கு கொடுக்கப் போறேன்... ஹிஹி!

'இல்லீங்க...அது வந்து... ஆமா... இருக்காங்க...உள்ள இருக்காங்க' தட்டுத் தடுமாறி உளறிக் கொண்டிருந்தேன்.

அதையெலாம் பொருட்படுத்தாமல் விறுட்டென மின்னல் உள்ளேயே போய் விட்டது!

எப்படியும் திரும்பி வருமே.... அப்போது எப்படியும் பேரைக் கேட்டு விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த போது... அம்மாவின் குரல் 'டேய், கடைக்குப் போய் கொஞ்சம் பூண்டு வாங்கிட்டு வந்துடுடா...'

-தொடரும்..

செவ்வாய், நவம்பர் 14, 2006

இனிதே ஆரம்பம்!


Thanks: Saravanan-malar

குளிரினால் இறந்து கொண்டிருக்கும் புற்களின்நடுவில் காலை பனியை சுமந்து இன்னும் உயிருடன்சில பச்சை புற்கள்

நீண்ட துயில் களைந்து,பொன்நிற ஒளிக்கற்றைகளால் இருட்டை கிழித்துதன் பணியை இனிதே தொடங்கி கொண்டிருக்கும்அதி காலை கதிரவன்.

கண்ணுக்கு இனிய இளம் சிவப்பு நிறத்தில்அரிதாரம் பூசியது போல் fall-ன் வரவை காட்டும்maple மரங்கள்

ஒளியை ஒளித்து கொண்டஅடர்ந்த மூடுபனி

பற்கள் தந்தியடிக்க,ஜில் என்று முகத்தை நனைக்கும்அதிகாலை குளிர் காற்று

வாகனத்தை நிருத்தி சாலையை கடக்கவழி தந்த அமெரிக்கனின்சிரிய புன்னகை

தொலைபேசியில் அம்மாவிடம் பெசியஅந்த இரண்டு மணித்துளிகள்

ஆள் இல்ல சாலையில்அலுவலகத்திற்கு நடந்து செல்லும் போதுவிருப்பமனவர்களிடம் செலவளித்ததருனங்களை அசை போட்டுகொண்டுஏங்கும் மனது

இதொ.. அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கிரேன்இன்னும் ஒரு நாள்..இன்னும் ஒரு வாரம்இனிதே ஆரம்பம்....

இந்த நாள் வருங்காலத்தில்நினைத்து பார்க்க நல்ல பலஇனிய நினைவுகளை தரும்என்ற நம்பிக்கயில்....

ஞாயிறு, அக்டோபர் 22, 2006

தொலைந்து போனவை..!

பேனா...பென்சில்
கைக்குட்டை..
செருப்பு...
கூடவே காதலியும்!
-யாரோ!

திங்கள், அக்டோபர் 09, 2006

தீபாவளித் திருநாள்!


தீபாவளித் திருநாள்!

வரவேற்போம்..வரவேற்போம்
வாழ்த்துக்கள் கூறி வரவேற்போம்....

தீபங்கள் ஏற்றி வரவேற்போம்
இன்பத் தீபாவளி திருநாளை வரவேற்போம்.....

இன்னல்கள் தீர்ந்திடவே..இருள் நீக்கி ஒளி பிறந்திடவே
இருகரம் கூப்பி இன்முகம் காட்டி வரவேற்போம்...

புத்தாடை உடுத்தி, புது நெல்லுச் சோறாக்கி
பட்டாசும் கொளுத்தி, பண்டிகையை வரவேற்போம்...

தித்திக்கும் இனிப்புப் பலகாரம், நாவினிக்க..தேன்குழலும்
ஒட்டு மொத்தமாய் சுவைத்திட பக்குவமாய் அம்மா தந்திடுவாள்....

நம்மை வாட்டும் துன்பமெல்லாம் தீர்ந்திடவே
நாமெல்லாம் சென்றிடுவோம் ஆலயமே...

உற்றார், உறவுகள் கூடி மகிழ்ந்திட்டு நல்ல
பல கதைகள் சொல்லி மகிழ்ந்திடுவோமே....

வாழ்த்துக்கள் பல கூறி வாழ்ந்திடுவோம் நாமிங்கே
ஆசிகள் பல பெற்று ஆனந்தமாய்க் களித்திடுவோம்...

என்நாளும் எதிர்பார்த்து என் கண்கள் உனைப் பார்த்து
வருவாய் அருள் தருவாய் இன்பத் தீபாவளித் திருநாளே.

நன்றி: தனிமதிக்கா

ஞாயிறு, அக்டோபர் 08, 2006

நிலாப் பெண்ணே!

நிலவில் நீர் உள்ளதா?
ஆம்...உள்ளது....
அடி நிலாப்பெண்ணே... உன் கண்களில் ஏனடி கண்ணீர்?
--------------------
நீ நிலவா... சூரியனா?
நீ நிலா அல்ல...
நிலவு சுட்டெரிப்பதில்லை!
--------------------
உலகுக்கு மாதம் ஒருமுறை தான் அமாவாசை...
ஆனால் எனக்கு...
உன்னைக் காணமுடியாத
வாரா வாரம் இரு நாட்கள் அமாவாசையடி!
--------------------
சூரியனாக நான் இங்கு உனக்காக காத்துக் கிடக்க...
நீ ஏனடி
பூமியை சுற்றி சுற்றி வருகின்றாய்?
--------------------
என்னை இனி நீ சுக்கிரன் என்று அழைக்கலாம்
சுக்கிரனுக்கு இரு நிலவுகளாம்
நேற்று தான் உன் தங்கையைக் கண்டேன்...ஹிஹி!
--------------------

சனி, அக்டோபர் 07, 2006

காதல் கல்வெட்டுகள் - 1

என் முதல் காதல்... மறக்க முடியாதது!
அவள் என் எதிர் வீட்டுப்பெண் தான்.
காலையில் பள்ளிக்கு போகும் போதும் சரி...சும்மா வெளியே வந்தாலே என் கண்கள் அங்கேயே அலை பாயும்.
அவள் எப்போதும் மிதி வண்டியில் தான் எங்கேயும் செல்வாள்.
இதனால், அவள் வீட்டில் இருக்கிறாளா...இல்லையா என சுலபமாக எனக்குத் தெரியும்...எப்போதும் நானும் அதே சமயத்தில் வெளியே கிளம்பிடுவேன். ஆனால் இது வெறும் கண்பேசும் வார்த்தைகள் தான்.
கூட இருந்த சக நண்பர்கள் தான் அதிகம் என்னை ஏற்றி விட்டது.
இப்படியே நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் போய் கொண்டிருந்தது. பார்க்கும் போதெல்லாம் ஒரு சிறு புன்னகையுடன் தொடர்ந்தது.
ஆனால் ஒரு 'Hello' அல்லது 'hai' கூட சொன்னதில்லை.
ஒரு நாள் தலையில் இடியென அவர்களின் பணி மாற்றல் செய்தி... அப்போது கூட பேச தைரியம் இல்லை...
அது ஒரு கனாக்காலம். ..ஆன.. கானல் காலம்!

இன்னும் சொல்கிறேன்!...

கண்டு பிடியுங்கள்!

In the moment when NewYork city went to sleep, loneliness caught me
And snow spread all over.
Even the breeze got down from the ship and started walking on shores!
Inside the four glass walls, me and a candlelight How lonely… how trecherous…
Oh beloved, you are not here to put me to sleep with the lullaby talk of yours
You are not here to kiss me in moonlight and give me coffee in the morning
You are not here to blow my eyes when dirt falls into my eyes
You are not here to clear the confusions of my heartI’m here & you are there,
In this loneliness, minutes have become years!
The sky is here & the color blue is there, Why did we become an example to that simile?!
My pen wrote your name 100 times in my daily planner
Just as I wrote, ants came from all over, did your name turn in...

இது என்ன சொல்லுங்கள் பார்ப்போம்...ஹிஹி!

நண்பர் இஜக் சரியாக கண்டுபிடித்துள்ளார்...
-------------------------------
நியூயார்க் நகரம் உறங்கும்
நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்ததே
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்ததே

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ
(நியூயார்க்)

பேச்சு எல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
நிலவின் ஒளியில் முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசிதன்னை நாவால் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம்தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானது ஏனோ
வான் இங்கே நீலம் அங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானது ஏனோ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
(நியூயார்க்)

நாட் குறிப்பில் தினம் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனெதன்ன தேனா
ஜில் என்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர் காலம் கோடை ஆனது ஏனோவா
அன்பே நீயும் வந்தால் செந்தணல்கூட பனி கட்டி போல ஆகுமே
(நியூயார்க்)

உங்கள் உதவி தேவை...

என் இனிய நண்பர்களே... இங்கே பாருங்கள்....
உடனே இதை தடுத்து நிறுத்த் உங்கள் உதவி தேவை...

There are some one who have started a community 'V Hate India',
the main pic is of our national flag burning...looking at that any indians blood should burn...
We have to stop them.
if you cant do much atleast go to this community and click on "report as bogus",
orkut will remove that community after 1000 such reports,lets teach a lesson to members of thatcommunity http://www.orkut.com/Community.aspx?cmm=14773994

please pass this 2 all Ur frnds....

வாழ்க பாரதம்!

நன்றி!

புதன், செப்டம்பர் 27, 2006

முதல் வணக்கம்!

வணக்கம் தமிழ் நண்பர்களே...

இது என் முதல் வலைப் பக்கம்.
இங்கே என் நினைவலைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.

ஆதரவுக்கு நன்றி!
-சராஜ்.