ஞாயிறு, டிசம்பர் 16, 2007

சலூன் போகலாம் வாரீகளா?

ஆணாக இருப்பதில் எத்தனையோ தொந்தரவுகள் ... அதிலும் தலையலங்காரம் செய்து கொள்வது என்பது பொறுமையை மிகவும் சோதிக்கும் ஒரு விசயம்.

அகிலும் நம்ம ஊர் எவ்வளவோ மேல்... போனோமா.... உட்கார்ந்தோமா.... பத்து அல்லது 20 நிமிடங்களில் வேலை முடிந்து விடும்.. 20ரூ அல்லது 30 ஓ கொடுத்து விரையில் வீடு திரும்பி விடலாம்.. !

ஆனால் அவ்வளவு துரிதவேலை இல்லை .. சீனாவில் ... ரொம்ப நேரம் பிடிக்கும்... செலவும் அதிக்ம தான்... :ஓ

ஆனாலும், இங்கு முடிதிருத்திக்கொள்வது முற்றிலும் வேறான அனுபவம்.

பள, பளவென்று சுத்தமாக, மிக நூதனமாக, மிக நவீனமாக இருக்கின்றன சீன சலூன்கள்.

பெரும்பாலும் இங்கு சலூன்கள் பெண்களாலேயே நடத்தப்படுகின்றன. ஆண்களைக் கவர்வதற்கு இது என்று ஆண் புத்தி சொன்னாலும் அங்கு வரும் 90% வாடிக்கையாளர்கள் பெண்கள்தான்.

நகம் வெட்டிக்கொள்ள, நகப்பாலிஷ் போட்டுக் கொள்ள, முகவடிவாக்க இப்படிக் கொசுறு வேலைகளுக்கென்று நிறையப்பேர் வருகிறார்கள். ஆனால் பெரும்பாலோர் தங்களது முடியை வண்ண, வண்ணமாக்கிக்கொள்வதற்கே வருகின்றனர்.

முதலில் நல்ல ஒரு சாய்வு சீட்டில் அமர சொல்லிவிட்டு .. குடிக்க என்ன வேண்டும் என விசாரிக்கிறார்கள்.. சுடு நீர் போதும் என சொல்லவே.... சூடான பச்சை தேனீர் தருகிறார்கள்... அதைக் குடித்து நிமிரும் முன்னரே.... சுகமாக தலைக்கு ஷாம்பு பாத்.

தலை பாதி உளரும் முன்னமே ... மசாஜ் தொடங்கி விடுகிறார்கள் ... ஹிஹி
தலை... முகம்... கால்.. முதுகு என... அசதியில் நன்னா தூக்கம் வந்துவிடும்ன்னா பாருங்களேன் ...

பின்னர் காது சுத்தம் செய்கிறார்கள்... அப்புறம் நகம் வெட்டல்கள் ... இதெல்லாம் முடிவதற்குள்ளேஎயே அரை மணிஆகிவிடும்...

பிறகு முடிவெட்டல். வெட்டியபின் மீண்டும் ஒரு ஷாம்பு. பின்னர் ஹேர் ட்ரை செய்கிறார்கள்.

இந்த முடித்திருந்தங்களில் பணி புரிவோர் அனைவரும் படிக்க வசதி இல்லாதோர்... குடும்பத்தில் அதிகமாக பிறந்ததினால் படிக்கும் ...வேலை வாய்ப்புகளை இழந்தோர்.

சீன இந்திய நட்புறவு!!!

இத்தனை நாள் நான் சீனாவைப்பற்றி அதிகமாக அலட்டிக்கொண்டதில்லை. காரணம் பசுமரத்து ஆணி போல் சில தீய நினைவுகள். இந்தியக் குடியரசு தோன்றி இரண்டு ஆண்டுகள் கழித்து சீன மக்கள் குடியரசு கம்யூனிசப்பாதையில் தோன்றுவிக்கப்படுகிறது. ஜப்பானிடம் காயடிபட்டு சீனரணம் மாறாத போழுதுகள். இந்தியா சீனாவுடன் நட்புறவு வேண்டியது. 'ஆசியஜோதி' ஜவகர்லால் நேரு சீனா சென்று பஞ்சசீலக் கொள்கையில் கையெழுத்திட்டு திரும்புகிறார். கும்பிடும் கையில் கொடுவாள் கொண்டது போல் சீனா இந்தியாவைத் தாக்குகிறது. லடாக் பகுதி சீனாவிற்குப் போய்விடுகிறது. சூயென்லாய் என்ற சீனப்பிரதமர் இதை முன்னெடுத்து நகர்த்துகிறார். சூயென்லாயே சீன நாயே! என்று ஊர் பூரா கரிக்கோடிட்ட சேதிகள் சுவரெங்கும். சீனாக்காரர்கள் யார் என்று தெரியாத பருவத்திலேயே ஒரு வெறுப்பு விதைக்கப்பட்டுவிட்டது. அது மாற இத்தனை நாள் பிடித்திருக்கிறது. அந்த வெறுப்பு காரணமில்லாத வெறுப்பன்று என்பதை காலம் காட்டுகிறது. சீனா ஒன்றுமறியா திபத்தை கைப்பற்றுகிறது. ரஷ்யாவுடன் சண்டைக்குப் போகிறது. தைவான் நாட்டின் சுதந்திரத்தை இன்றளவும் நெருக்குப்பிடியில் வைத்திருக்கிறது.

ஆனாலும் காலம் மாறுகிறது. மக்கள் முதிர்ச்சியடைகின்றனர். நான் ஜெர்மனியில் இருந்தபோது கிளவுஸ் கிரம்ளின் என்ற சக விஞ்ஞானி அடிக்கடி சொல்லுவார். ஒவ்வொரு ஐம்பது வருடங்களுக்குள்ளும் பிரான்சும், ஜெர்மனியும் போரில் இறங்குவது வழமை என்று. ஆனால் இரண்டாவது உலக யுத்தத்தின் பேரழிவிற்குப்பிறகு இன்று பிரான்சும், ஜெர்மனியும் முன்னின்று ஐரோப்பிய ஒருங்கிணைப்பை சாத்தியமாக்கியிருக்கின்றன. உலகெங்கும் வியாபார இணக்கம் பெருகி வருகிறது. சந்தைப் பொருளாதாரம், சண்டைப் பொருளாதாரத்தை விட ஒரு படி மேல் என்ற மன மாற்றம் உலகெங்கும் நிகழ்ந்து வருகிறது. இதற்கு கம்யூனிசச் சீனாவும் விதி விலக்கல்ல. ராணுவக் குவிப்பைவிட யுக்தியான வியாபாரமே ஒரு நாட்டின் வளத்திற்கு உத்திரவாதம் என்பதைக் கம்யூனிசத் தலைவர்கள் இன்று உணர்ந்துள்ளனர். இந்த மாற்றத்தை பற்றிய ஒரு சீன உயர் அரசியல்வாதியின் கூற்று பின்வருமாறு அமைகிறது: கருப்பு பூனை சிறந்ததா? வெள்ளைப்பூனை சிறந்ததா? எனக் கேட்டால்? எந்தப்பூனை எலியைப் பிடிக்கிறதோ அந்தப் பூனையே சிறந்தது! இதைச் சீனா சென்று வரும் எவரும் உணர முடியும். இந்த அணுகுமுறையின் பிரதிபலிப்பாக உலகின் மாபெரும் இராணுவத்தை கைவசம் வைத்திருக்கும் சைனா சரிபாதியாக ராணுவக் குறைப்பு செய்துள்ளது. இராணுவம் என்பது காப்புறுதி சேமிப்பு மாதிரி. என்றாவது நிகழப்போகும் சாவிற்கு இன்றிலிருந்து காசு கொடுப்பது போல். ஆக்கமற்ற சேமிப்பு அது. அது ஒரு நாட்டின் பெரும் பளு. இதைச் சீனா உணர்ந்துள்ளது. கடந்த 55 வருடங்களில் சீனா மட, மடவென வளர்ந்துள்ளது.

இன்று சீனாவின் தலைநகரான பெய்ஜிங் (பீகிங்) போவோர் பிரம்மித்துப் போவோர்! 70 களில் ஒரு சீனனின் கனவு ஒரு நல்ல சைக்கிள் வைத்திருப்பது. 80களில் அவன் கனவு ஒரு நல்ல குளிர் சாதனப்பெட்டி வைத்திருப்பது. 90களில் அவன் கனவு ஒரு நல்ல கார், நல்ல வீடு, பிற வசதிகள். பெய்ஜிங் நகரில் இருக்கும் நூற்றுக்கணக்கான மேம்பாலங்களில் ஒரு நான்கை டெல்லி பெறுவதற்கு இன்னும் தசாம்சங்கள் ஆகும். ஒரு ஒசாகா (ஜப்பான்), ஒரு சோல் (கொரியா), ஒரு சிங்கப்பூர், ஒரு கோலாலம்பூர் (மலேசியா) போல் இன்று பெய்ஜிங் விளங்குகிறது. பெய்ஜிங் போய் பார்த்தால் சீனா ஏழை நாடு என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனாலும், உலகிற்கு ஒரு ஏழை முகத்தைக்காட்ட சீனா பெய்ஜிங்கின் ஒரு பகுதியை பழையபடியே வைத்துள்ளது. அங்கு அங்கஹீனமுற்ற பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். சைக்கிள் ரிக்ஷா இருக்கிறது. ஆனாலும் அது இந்தியாவில் காணும் ஏழ்மைக்கு முன் கொசுறு. பெய்ஜிங் அடுத்த ஒலிம்பிக் விளையாட்டை அங்கு நடத்த தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருக்கிறது. பெய்ஜிங் மிக சுத்தமாக இருக்கிறது. சாலை விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. உண்மையில் கொரியாவைவிட அங்கு சாலைப் போக்குவரத்து மிக ஒழுங்காக இருக்கிறது. சைக்கிள் போவதற்கு என்று நம்மவூர் சாலை அளவில் பெரிய பகுதி ஓரத்தில் விடப்பட்டுள்ளது (அப்படியெனில் காரோடும் சாலை எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்!).

மக்கள் தேனீ போல் சுறு, சுறுப்பாக இயங்குகின்றனர். சோம்பிப்போய் யாரும் உட்கார்ந்திருக்கவில்லை. சீனாவின் நாடியைப் பிடித்துப்பார்க்க நல்ல இடம் 'சொர்க்கத்தின் கோயில்'எனும் இடமாகும். அங்கு பெய்ஜிங்கின் கிழடு கட்டையெல்லாம் கூடியிருக்கின்றன. இப்படி எழுதியவுடன் கூன் விழுந்து, கையில் கோல் ஊன்றிய மூத்த மக்களை நினைப்பீர்கள் என்று தெரியும். ஆனால் நான் பார்த்தது அதற்கு நேர்மாறு! நிச்சயமாக 70த் தாண்டிய பெரிசுகள். பூங்காவின் ஒரு புறம் ஆணும், பெண்ணும் கைகோர்த்தபடி நடனமாடிக்கொண்டிருக்கின்றனர�
. இன்னொருபுறம் பலர் பூப்பந்து போன்ற ஒன்றை ஒரு நடனம் போலவே விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இது தாய்ச்சி என்ற யோகமுறையில் அமைந்த விளையாட்டு. பந்தின் வேகத்தை எதிர்க்காமல் அதன் வீச்சுடன் இயைந்து போய் திரும்பத்தரும் விளையாட்டு. இதற்கு நளினமும், யோகப்பயிற்சியும் வேண்டும். இன்னொரு புறம் ஒரு கிழவி சுருதி பிசகாமல் பாடிக்கொண்டிருக்கிறாள், அதற்கு ஒரு கிழம் வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறது. இப்படி எங்கு பார்த்தாலும் முதியோர் சளைத்து உட்காராமல் ஏதாவதொரு தொழிலை ஈடுபட்டு செய்வது ஏதோ சொர்க்கத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வை கொடுத்தது. நம்ம ஊர் கிழங்கள் என்ன செய்யும்? 60க்கு மேல் அவர்களெல்லாம் குடும்ப பாரம்! கட்டிலில் ஒரு புடலங்காய் போல் முடங்கிக் கிடக்கிறார்கள். கொஞ்சம் சிலர் வேகு, வேகு என்று பீச்சில் நடக்கிறார்கள். பேச்சுத்துணைக்கு என்று ஒரு கோஷ்டியே! இந்தப் பேச்சு பெரும்பாலும் அரசியல், பிறர் வீட்டு வம்பு தும்பு என்றுதான் இருக்கும். சீனா இன்று வயதானவர்களை அதிகம் கொண்ட நாடாக இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தன்னை ஒரு பாரமாக கருதுவதில்லை. மேலும் வாழ ஆசையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிக காலம் உயிர்வாழும் ஒரு மக்கள் தொகையாக சீனா உள்ளது. அதற்கு அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி, தெம்பான உள்ளம், நாட்டு வைத்தியம் போன்றவையே முக்கிய காரணமாக காட்டுப்படுகின்றன. இந்தியாவில் நாட்டு வைத்தியம் மறைந்து விட்டது. முதியோர் நாட்டின் பாரமாக சாவுக்குக்காத்திருக்கிறார்�
ள். இது எவ்வளவு பரிதாபமானது!

சீனா தன் பழமைக்கலைகளை மறந்துவிடாமல் அதற்கு நவீன உரு கொடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஷாவொலின் புத்த துறவிகள் குங்பூ கலையில் பெயர் பெற்றவர்கள். இவர்களுக்கு மறத்துறவிகள் (warrior monks) என்றே பெயர். சக்தியின் பூரணத்துவத்தை அறிந்து, பின் சாத்வீகமாகுவது இக்கலையின் சூட்சுமம். பெய்ஜிங்கில் நான் போன போது 'குங்பூவின் கதை' என்ற நிகழ்வின் முதல் ஆட்டம் (world premiere). இதில் உண்மையான மறத்துறவிகளும், நடனக் கலைஞர்களும் பங்கு கொண்டனர். முன்பு சினிமாவில் இப்படங்களைப் பார்த்ததற்கும் நேரில் பார்பதற்கும் அதிக வித்தியாசமுள்ளது. சினிமாவில் ஏதாவது கிராஃபிக் எபெக்ட் கொடுத்து சமாளித்து விடலாம். ஆனால், மேடையில் முடியாது. ஷாவொலின் மறத்துறவி உண்மையிலேயே தன் தவ வலிமையால் ஒரு சூலாயுதம் தன் வயிறில் குத்திக்கிழிக்கா வண்ணம் தவழ்ந்து காட்டுகிறார். மூன்று இரும்புத் தகடுகளை தன் மண்டையில் போட்டு உடைக்கிறார். காட்சி முடிந்து வரும் போது உடைந்த பாளங்கள் ஒரு கூடையில் போட்டு வைத்து காண்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே ஒரு ஆன்மீக நிகழ்ச்சி. எப்படி ஒரு சிறுவன் குங்பூ கலையில் ஆர்வம் கொண்டு தளைகளைக் கடந்து மறத்திறவியாகிறான் என்பதே கதை. அதில் புலனடக்கம், பயிற்சி, மனதின் மாயை, சதோரி எல்லாம் காட்டப்படுகின்றன. மேலை, இந்திய நாடக நிகழ்வில் கலைஞர்களை ரசிகன் கைதட்டி ஊக்குவிக்க வேண்டும். கலைஞனைப் பார்ப்பதென்றால் அதற்கு ஆள், சிபாரிசு, அந்தஸ்து வேண்டும். ஆனால், உலகப்புகழ் பெற்ற குங்பூ கலைஞர்கள் நிகழ்ச்சி முடிந்தபின் வாசல் வரை வந்து ரசிகனை வழியனுப்பி வைப்பது எங்கும் காணாத நிகழ்வு. அது உண்மையிலேயே அவர்களது பண்பாட்டைக் காட்டுவதுடன், கீழைத்தைய நாகரீகம் தன் விழிமியங்களை மறந்துவிடவில்லை என்பதையும் சொல்லாமல் சொல்கிறது.

சீனா இன்னும் சில ஆண்டுகளில் விண்வெளியில், நிலாவில் மனிதனை இறக்கப்போகிறது. சீனாவை இனிமேலும் நாம் எதிரியாய் பார்ப்பது நன்றல்ல. பெய்ஜிங்கில், ஏன் பொதுவாகவே சீனாவில் இந்திய சினிமாவிற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. நான் போன போதுகூட ஒரு ஹிந்திப்படம் ஓடிக்கொண்டிருந்தது. இசை, சினிமா போன்றவைதான் நிகழ்கால அம்பாசிடர்கள். அவைகள் கலாச்சாரப் பாலங்கள். அதன் மூலம் நட்பை வளர்க்கலாம். விமான நிலையத்திலேயே ஆச்சர்யம் காத்திருந்தது. பெட்டியை உள்ளே கொண்டுவரும் கண்வேயர் பெல்ட்டில் காணும் சித்திரங்களில் 'மீனாக்ஷி திருக்கல்யாணம்' இருந்தது. என்றோ ஒரு பாண்டியன் நல் முத்து கொடுத்து சீனப்பட்டு வாங்கியிருக்கிறான். அது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்றைய சீனத்தலைநகரில் காணக்கிடைப்பது மிக்க மகிழ்வைக் கொடுத்தது. பெரிய, பெரிய ஹோட்டல்களில் நிறைய இந்தியத் தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களைக் காணக்கூடியதாய் உள்ளது. 'தடை நகரில்' (forbidden city) தமிழ்க் குடும்பத்தைக் கண்டு கதைக்கக்கூடியதாய் இருந்தது!

தென் கிழக்கு, தூரக்கிழக்கு ஆசியா முழுவதும் இந்தியாவின் ஆன்மீக ஆளுமை இன்றளவும் காணக்கூடியதாய் உள்ளது. கலை, ஆன்மீகம், மொழி என்று இந்தியா அங்கெல்லாம் வாரி, வாரி வழங்கியிருக்கிறது. ஒரு பெருமிதத்துடன் தொலைந்து போன ஒரு நட்பை இந்தியா சீனாவுடன் மீட்டுரு செய்ய வேண்டும். அது இரண்டு நாடுகளுக்குமே நல்லது. ஒன்றின் சந்தை மற்றொன்றின் வளம். இந்திய மனம் மாறுமா?

கமலின் கவிதை! மனித வணக்கம்!!

கடந்த சில தினங்களுக்கு முன் கவிஞர் புவியரசுக்கு பாராட்டு விழா நடத்தினார் கமல். அப்போது, தான் எழுதிய கவிதை ஒன்றை மேடையில் வாசித்தார். பலரையும் பரவசப்படுத்திய கமலின் அந்த கவிதை இதுதான்!

மனித வணக்கம்

தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடி போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல..
எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை,
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தியுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும், குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.

ஆம்,
நாளை உன் வரியில் நான் தெரிவேன்.

அன்பன்
-கமல்ஹாசன்


நன்றி. தமிழ் சினிமா

சிக்' கென பிடித்தேன்!!

இனிய இளவேனிற்கால விடியற்காலை. விடிந்தும் விடியாமலும்... பொழுது புலர்ந்தும் புலராததுமான ஒரு நேரம்.

அனைவருக்கும் இவ்வேளையில் வரும் ஆழ்ந்த உறக்கம் என்னக்குள்ளும்... புரண்டு படுக்கையில்... உள்ள்ங்கையில் ஏதோ ஒரு நெருடல்... தொட்டுப் பார்க்கின்றேன்...

நல்ல தூக்கத்தின் ஊடே... மீண்டும் கையில் அகப்பட... இந்த முறை விட்டுவிடக்கூடாது.. கவனமுடன் துழாவி... கிடைத்துவிட்டது... பிடிக்கின்றேன்...

மீண்டும் நழுவல்.. அடச்சே.. நிம்மதியாக தூக்கக் கூட முடியவில்லையே... மீண்டும் இருத்து பிடிக்கின்றேன்.. மிகவும் மிருதுவான.. வளவளப்பான.. ஒரு வஸ்து...

இம்முறை மீண்டும் பிடி கொடுத்து... சென்றது.. தற்போது நிறைய.. அகப்பட்டது... அவ்வேளையில்.. ஏதோ.. தலையில் மின்னலடிக்கும் வலி...

என்ன தொடர்போ... மீண்டும் கையருகே தட்டுப்பட...
சிக்'கெனப் பிடித்தேன்... இழுத்தேன்...


ஐயோ... அம்மா... வலி உயிர் போனது...
அடக் கருமமே...
ரெண்டு மாதங்களாக... வெட்டப்படாத... பங்க் எனும் புது பேஷனுக்காக வளாத்த... என் முடிக்கற்றை தான் அது....

திங்கள், ஜூன் 04, 2007

சோழநாட்டு சூரியன் வாழ்க! வாழ்கவே!

அது 60 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. நீதிக்கட்சி திராவிட கழகமாய் பெயர் மாற்றம் பெற்று இன இழிவு ஒழிப்பு, சுயமரியாதை, சமூக சீர்த்திருத்தத்தை தன் களமாய் தேர்ந்தெடுத்து இயங்கிக் கொண்டிருந்த காலம்.

திராவிடர் கழகத்துக்கென தனி கொடியில்லை. கழக முன்னணியினர் கழகத்துக்கு என ஒரு கொடி வேண்டும் என முடிவு செய்து கொடியினை வடிவமைக்க கூடியிருக்கிறார்கள். தேசத்தின் இழிவை குறிக்கும் வகையில் கருப்பு நிறமும், அந்த இழிவினை ஒழிக்கும் புரட்சி நிறமாக சிகப்பினையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒரு வெள்ளைத்தாளிலே கழகத்துக்கான கொடி வரையப்படுகிறது. கருப்பு நிற மையினால் தாள் முழுவதும் கருப்பு வண்ணம் பூசப்படுகிறது. நடுவிலே சிகப்பு வட்டம் வரவேண்டும். யாரிடமாவது சிகப்பு நிற பேனா இருக்கிறதா என்று பெரியார் கேட்கிறார். யாரிடமும் இல்லை.

"சிகப்புநிற மை எதற்கு? என் குருதி இருக்கிறதே" என்று கூறியபடி வந்த இருபது வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் தன் விரலை குண்டூசியால் துளைத்து வந்த குருதியை கொண்டு சிகப்பு வட்டத்தை பூர்த்தி செய்கிறார். கழகக் கொடி கம்பீரமாக தொண்டனின் குருதியால் உருவாகிறது.

அந்த இளைஞர் 84 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ மண்ணில் அஞ்சுகத்தம்மாளின் திருவயிற்றிலே உதித்த உதயசூரியனாம் டாக்டர் கலைஞர்.

கல்லூரியையும், கல்யாண மண்டபத்தையும் காக்க தனி கட்சி தொடங்கிய குடிகாரனெல்லாம் இன்று கலைஞரை பார்த்து எப்போது குடிவந்தாய் கழகத்துக்கு? என்று கேட்கிறான். இந்த இனமான வரலாறு எல்லாம் அந்த குடிகாரனுக்கு தெரியுமா?

இன்று திராவிடக் கட்சிகள் என்று தம்மை தாமே கூறிக்கொள்ளும் கட்சி கொடிகளில் எல்லாம் இருக்கும் சிகப்பு எங்கள் தலைவரின் ரத்தம்!

மானங்கெட்டவர்களே! மதியிழந்தவர்களே! உங்களுக்கெல்லாம் சூடு, சொரணை சிறிதேனும் இருந்தால் தலைவர் கலைஞரின் குருதியில் விளைந்த சிகப்பு நிறத்தை உங்கள் கட்சிக் கொடிகளில் இருந்து நீக்கிவிட்டு அரசியல் நடத்துங்கள். இல்லையேல் பார் போற்ற 84வது பிறந்தநாளை காணும் எங்கள் தங்கத் தலைவன், சோழ நாட்டு சூரியன் டாக்டர் கலைஞரின் பாதம் தொட்டு வணங்கி பிழைத்துப் போங்கள்.

அரசியல் தலைவர்களிலேயே அரசியல் வாழ்விலும் சரி, சொந்த வாழ்விலும் சரி முழுத்திருப்தியும், எவரெஸ்ட் உயரத்தையும் அடைந்த பரிபூரணத் தலைவர் ஒருவர் உண்டென்றால் உலக வரலாற்றிலேயே அது தலைவர் கலைஞர் மட்டும் தான்.

நடிகர் திலகம் ஒருமுறை சொன்னபடி நமது வாழ்நாளிலே சிலவற்றை யாருக்காவது தரமுடியுமேயானால் உடன்பிறப்புகள் அனைவரும் எங்கள் வாழ்நாளில் பாதியை தலைவர் கலைஞருக்கு தந்து... இன இழிவு நீங்க, தமிழனின் புகழ் தரணியெங்கும் பரவ அந்த தங்கத் தலைவனை பல நூற்றாண்டுகளுக்கு வாழவைப்போம்.

வாழும் தமிழே வாழி! நீ வாழ்ந்தால் தமிழ் வாழும், தமிழனின் புகழ் உயரும் என கூறி வாழும் வள்ளுவன் தலைவர் கலைஞரை வாழ்த்த வயதில்லாமல் உடன்பிறப்புகள் வணங்குகின்றோம்.

வாழ்க தமிழ்!!! வெல்க தமிழர் தலைவனின் நெஞ்சுரம்!!!

(நன்றி : டாக்டர் கலைஞர்)

செவ்வாய், ஏப்ரல் 03, 2007

‘காதல் படிக்கட்டுகள்’! - நன்றி : விகடன்

எத்தனை எத்தனையோ பேரின் உள்ளக் குளங்களில் மெல்லிய மலர் வீசி சுகமாக சலனப்படுத்திய தொடர்தான் ‘காதல் படிக்கட்டுகள்’! அதில் 15/1/1997 இதழில் தமிழக முதல்வர் கருணாநிதியின் அனுபவங்கள்..

‘‘கடவுளைப் போலத்தான் காதலும்! உண்டா இல்லையா என்பதை எந்த தர்க்கமும் முடிவு செய்ய முடியாது’’ என்று என் மகள் கனிமொழி, ஜூனியர் விகடனில் எழுதியதைப் படித்துப் பார்த்துக் கொண்டும், என் பேரன் களும் பேத்திகளும் சாதி பேதச் சுழல்களைத் தாண்டி நின்று காதல் திருமணங்கள் செய்து கொண்டதை வாழ்த்திக் கொண்டும் கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டும் இருக்கின்ற இந்த வயதில் நீயும் கொஞ்சம் காதல் படிக்கட்டுகளில் ஏறிடுக என்றால் இது ஒரு வேடிக்கைதானே! ‘இதில் என்னய்யா வேடிக்கை இருக்கிறது?’ என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ‘முதியோர் காதல்’ புத்தகம் வீட்டு நூலகத்திலிருந்து எட்டிப்பார்த்துச் சிரிக்கிறது. அதுவும் ஓர் அழகின் சிரிப்புதானே!

வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருக்கிற நெல்சன் மண்டேலா, ஒரு நடுத்தர வயது மங்கையைக் காதலித்துக் கட்டித்தழுவும் படங்கள் ஏடுகளை அலங்கரிக்கும் இந்தக் காலத்தில், நான் காதலைப் பற்றி ஒரு கட்டுரைதானே எழுதுகிறேன். எனவே, என் கொள்ளுப் பேரர்களும் பேத்திகளும் கோபித்துக் கொள்ளமாட்டார்கள்.

‘‘காதல் வர்ணனைகளைக் காட்டாற்று வெள்ளமெனப் பொழிந்து தள்ளிய இந்தப் பேனா, இப்போது மிகச் சாதாரண நடையில் சில செய்திகளைச் சொல்லப் போகிறது.’’

இப்படிச் சுருக்கமாக என் காதல் (தோல்வியுற்ற) கதை ‘நெஞ்சுக்கு நீதி’ சுயசரிதையில் முதல் பாகம் 74&வது பக்கத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.அந்༢r />??க் காதல் நடந்த நாட்களையும் அது தோல்வியுற்ற காரணத் தையும் நினைத்துச் சுவைக்கும் வயது இப்போது எனக்கு! அதனால் அந்தக் காதல் படிக்கட்டுகளில் என் நினைவுக் கால்களால் சற்று நடந்து திரும்புகிறேன். ஆம்; அன்று எழுதாததை அல்லது எழுத விட்டுப் போனதை, இன்று எழுதுகிறேன். எழுதக்கூச்சப் படும் இளமைப்பருவம் பறந்துவிட்டதால் இந்த முதுமைக்கு ஏற்பட்ட துணிச்சல். வெட்கம் மறந்து விட்ட நிலையில் எழுதிடத் தூண்டுகிறது என்னை; அதனால் எழுதுகிறேன்.

கொடி ஊர்வலங்கள் & கூட்டங்களில் முழக்கங்கள் & கொள்கை பரப்பிட நாடகங்கள் என்று கோடை வெப்பத்தில் தகித்துக் கொண்டிருந்த நான், இடையிடையே திருவாரூர் உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறைகளுக்கும் சென்று திரும்பிக் கொண்டி ருந்த பள்ளிப்பருவ காலமது. அப்போதுதான் அவளிடம் நானும், என்னிடம் அவளும் மனத்தை பறி கொடுத்த நிகழ்ச்சி நடந்தது. அவள் பெயர்... அவள் பெயர்... உண்மைப் பெயரைச் சொல்ல வேண்டாம்... ஏனென்றால் அவள் இன்னும் உயிரோடு இருக் கிறாள். குறிப்பாக, சாந்தா என்று ஓர் அடையாளப் பெயர் வைத்துக் கொள்வோமே! சாந்தா என்பதில் ஓர் எழுத்து மாறினால் அவள் உண்மைப் பெயர். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று பரிசுப் போட்டி வைக்க விரும்பவில்லை. அந்த சாந்தா என்னுடன் அதே பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தாள். ஒரு வகையில் தூரத்து உறவும்கூட! நல்ல உறவில்தானே பொல்லாத பகையும் முளைத்துத் தொலைக்கும். எங்கள் இரு வீட்டாருக்கும் பேச்சுவார்த்தைகள் கூட இல்லாத அளவுக்கு செமப்பகை! அந்தப் பகை நடுவே, எங்களுக்குள் பனிப்புகை நடுவே புகுந்த கதிர்போல காதல் தோன்றிவிட்டது. அவள் பள்ளிக்குப் புறப்படும் நேரம் பார்த்து நானும் புறப்படுவேன். ஆரூரின் அகன்ற சாலைகளில் அவள் ஒரு பக்கம் போவாள். நான் இன்னொரு பக்கமாகத் தொடர்ந்து நடப்பேன். அவள் திரும்பிப் பார்க்கிறாளா என்று நான் அவள் பின்னால் நடப்பதும் உண்டு. நான் திரும்பிப் பார்ப்பதை அவள் கடைக்கண்ணால் கண்டிட அவள் என் பின்னால் நடப்பதும் உண்டு.

மாலையில் பள்ளி முடிந்ததும் அவள், தட்டச்சு கற்றுக் கொள்ள கமலாலயக் குளக்கரையில் இருந்த ஒரு ‘டைப் ரைட்டிங்’ நிலையத்துக்குச் செல்வாள். நானும் தட்டச்சு கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்பதாக என் வீட்டில் பொய்யுரைத்து மாதம் இரண்டு ரூபாய் சம்பளத்தை அந்த நிலையத்தில் வீணாக்கிக் கொண்டிருந்தேன். அவள் தட்டச்சு பயிற்சி முடித்துப் புறப்பட்டவுடன் நானும் புறப்பட்டு விடுவேன். என் தட்டச்சுப் பயிற்சியில் ஆங்கில எழுத்துக்களான ‘எல்&ஓ&வி&இ’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் கற்றுக் கொள்ளவில்லை. அந்த எழுத்துக்களை மட்டுமே தட்டச்சுப் பொறிக்குப் பதிலாக என் இதயத்தில் அடித்துப் பழகி, பதிய வைத்துக் கொண்டு சில நாட்கள் பைத்தியமாகத் திரிந்தேன்.

‘கண்ணொடு கண் நோக்கும் காதல்’ பிறகு கடிதக்காதலாக மாறியது. திருவாரூரில் நான் தங்கிப் படித்துக் கொண்டிருந்த வீட்டில் ஒரு சிறுவனும் சிறுமியும் என் அன்புக்குப் பாத்திரமானவர்கள். காலை எழுந்தவுடன் அவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பேன். சரியாகப் படிக்கச் சொல்லி அவர்களைக் கண்டிப்பதும் உண்டு. அந்தச் சிறுவனை மட்டும் காதைத் திருகித் தண்டிப்பதும் உண்டு. நான் தங்கிப் படித்த அந்த வீட்டுக்கு அருகில் அதே தெருவில்தான் என் சாந்தாவின் வீடும் இருந்தது. அவள் வீட்டுக் கொல்லைப்புறமும் என் பள்ளி நண்பன் ஒருவன் வீட்டுத் தெருவாசல் பகுதிகளும் எங்கள் விழிக்கணைகள் பாயும் காதல் களங்களாக இருந்தன. சில நாட்களில் என்னிடம் பாடம் பயின்று கொண்டிருந்த அந்தச் சிறுமி எங்களுக்கிடையே ‘தூதி’ ஆகி விட்டாள். ஒரு நாள் சந்தித்தே தீருவது என்று எங்கள் கடிதங்கள் உறுதிமுழக்கமிட்டன. அதன்படி அந்தி மாலை நேரத்தில் அவள் அம்மன் கோயிலுக்குப்போய் அர்ச்சனை செய்துவிட்டு, தட்டுடன் திரும்பும்போது அந்தக் குறுகலான சந்தில் உள்ள ‘வீரனார் கோயில்’ முன்பு, அரைகுறை இருட்டில் அருகருகே சந்தித்துவிட்டோம். அந்த ‘வீரனார்’ அறிய மறக்கமாட்டேன் என்று கையடித்துச் சத்தியம் செய்தாள். மனசாட்சி அறையக் கைவிடமாட்டேன் என்று நானும் உறுதி அளித்தேன். உடனே பிரிந்து விட்டோம்; அச்சம் எங்களை ஓங்கி ஓங்கி உதைத்ததால்!

சாந்தாவுக்கு மாப்பிள்ளை தேட அவசரத் திட்டம் வகுக்கப் பெற்றது. அவளோ கடைசிவரை போராடி இருக்கிறாள் எனக்காக. அதற்குள் அந்த வீட்டில் நடக்கும் அமளி என் வீட்டுக்கதவுகளைத் தட்டிவிட்டது. என்னிடம் கேட்டார்கள். ஆமாம் என்றேன். பகையை மறந்து சாந்தாவையே எனக்குப் பெண்கேட்க என் தந்தையும் தாயும் முதற்கட்டமாக என் உறவினர்களை அனுப்பினார்கள். அதற்குக் கிடைத்த பதில் என்ன?

‘‘அவன் கட்சி கட்சி என்று உருப்படாமல் அலைந்து கொண்டிருக்கிறான். அவனுக்கா பெண் கொடுக்க முடியும்? அப்படியே கொடுப்பதாக இருந்தாலும், அவன் சுயமரியாதைக் கல்யாணமல்லவா செய்து கொள்ள வேண்டுமென்பான். சரி, பெண் கொடுக்கிறோம். புரோகிதத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிப்பானா?’’

பதில், பயங்கரமான கேள்விகளாக வெடித்தெழுந்தன. அந்தக் கேள்விகள் வடிவத்து நிபந்தனைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? எத்தனை எத்தனை சுயமரியாதைத் திருமணங்களை நான் முன்னின்றும் நானே சென்று வாழ்த்தியும் நடத்தி வைத்திருக்கிறேன். புரோகிதத் திருமணமென்றால் முடியாது என்று மறுத்தேன். அதற்கிடையே அவள் கடிதம் வந்தது கண்ணீரால் எழுதப்பட்டு! ‘‘காதலா? கொள்கையா?’’ இதுதான் அந்தக் கடிதத்தின் கருப்பொருள்.

‘‘ஊருக்குத்தான் உபதேசம்.

உனக்கும் எனக்கும்

இல்லையடியென்று கூறுவது

எத்தனின் செயல் அல்லவா?’’

என்ற கருத்தமைந்த பதிலை கண்டிப்பான பதிலை அவளுக்கு எழுதினேன். அவள் தனது பிடிவாதத்தினால் பெற்றோரை இணங்க வைப்பாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவளே இணங்கி விட்டாள் & அவர்கள் பார்த்த மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்ட!

ஏன். அவள்தான் அந்தக் கொள்கையை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாதா? இல்லை, நான்தான் என் கொள்கையை விட்டுக் கொடுத்திருக்கக்கூடாதா? அவளுக்குத்தான் ‘வீரனார்’ கோயில் சத்தியம் என்ன ஆயிற்று? எனக்குத்தான் நான் மனசாட்சிப்படி வழங்கிய உறுதி எங்கே யோயிற்று? எப்படியோ இங்கே காதல் ஒரு பின்னடைவை எதிர்கொள்ள நேரிட்டு விட்டது.

அதன் பின்னர் சில நாட்களில் ஒரு திகில் செய்தி& என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. எனை விடுத்து வேறொருவனை மணந்த சாந்தா விதவையாகி விட்டாள்! அவள் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் தொடர்ந்து இருந்துவந்த பகை, அவளுக்கு ஏற்பட்ட அந்தச் சோகத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல அகன்று & இருவீட்டார் உறவிலும் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது. அந்த நேரத்தில் என் வேண்டுகோள் ஏற்கப்பட்டு, சாந்தாவின் மறுமணத்திற்கு அவளது வீட்டார் சம்மதம் தெரிவித்தார்கள். அவளுக்கு மறுவாழ்வு அளிக்க வந்தவனுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். அவனையும் வாழ்த்தினேன். அன்று என் விருப்பப்படி சீர்திருத்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் எங்களைப் பிரித்த அவளது பெற்றோர், சீர்திருத்தத்திலும் தீவிர சீர்திருத்தமான விதவைத் திருமணத்திற்கே ஒப்புதல் அளித்தார்கள் என்பது ஒரு விந்தையே!

அவள் இப்போது எங்கேயோ இருக்கிறாள் & எப்போதோ பார்த்த ஞாபகம் & எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கும் வயதுடையாள் _ ஆனாலும், இளமையில் நான் ரசித்த அந்தக் குண்டு குண்டான கெண்டை விழிகள் இன்றும் என் நினைவை விட்டு அகலுவதில்லை. அந்தக் கண்கள் மீது நான் கொண்ட காதல் அப்படியே மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக; இப்போது நான் அவளைப் பார்க்க விரும்பவில்லை.

புதன், மார்ச் 14, 2007

கனாக்காலம்!

அழகானவை,
எனக்குப் பிடித்தமானவை
எல்லாம்
பார்த்து ரசிக்க மட்டும்தானா?

விண்மீன் கள் - லட்சக்கணக்கில்
கொட்டிக்கிடக்கும்
வானம் எனக்குப் பிடிக்கும்
ஆனால் அவைகளை
எட்டிப்பிடிக்க சாத்தியமில்லை...

பஞ்சு மெத்தைகளைச் சுமந்த
நீல நிற வானமும் எனக்குப் பிடிக்கும்
ஆனால் அவைகளை
தொட்டுப் பிடிக்க சாத்தியமில்லை...

விண்மீன் துடிப்பும்
வெண் மேக
அழகும் கொண்ட உன்னையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
ஆனால்,
உன்னை
எட்டிப்பிடிக்க... தொட்டுப்பிடிக்க
சாத்தியமில்லை தானே...

எனக்குப் பிடித்தமானவை
எல்லாம்
பார்த்து ரசிக்க மட்டும் தானா??!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ கதிரவள் என்றால் (கதிரவனின் பெண்பால் கதிரவள் தானே??!!)
நான் சந்திரன்
- உன்னால் உயிர் வாழ்பவன் நான்
நீ உயிரென்றால்
நான் உடல்
நீ இல்லாமல் இருக்கிறேன் இப்போது...
நீ வருவாயோ எப்போது??!!
~~~~~~~~~~~~~~~~~~~

என் தேடல்கள்
என் சாடல்கள்
என் துக்கங்கள்
என் உற்சாகங்கள்

எல்லாம் நீயாக இருக்க
உன்னைக் கண்ட நாள் முதல்
நான் மட்டும் ஏன் நானாக இல்லை ??!!
~~~~~~~~~~~~~~~~~~~~

ஆருயிர் காதலிக்கு...

ஆருயிர் காதலிக்கு...

என் உயிரை உருக்கி மையாக ஊற்றி
என் காதலை வார்த்தைகளாக வடிக்க
இந்த வெற்றுக் காகிதத்தில்
என் இதயத்தை திறக்கின்றேன்.

வெள்ளிக் கரண்டியுடன் பிறந்த உனக்கு
இந்த காகிதப் பரிசுதான்
காதலர் தின பரிசாக
என்னால் இப்பொழுது தர முடிகிறது!

இப்பொழுது மட்டும் தான்
இந்தக் காகித இதயம்
ஆனால்
இந்த உயிர்வாழ வைக்கும் என் நிஜ இதயம்
உனக்கு மட்டும் தான்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த வரிகளையே சற்று மாற்றினால் நன்றாக இருக்குமென்று எனக்குத் தோன்றியது...

என் உயிர்...
உயிர்'மை'யாகி வார்த்தைகளானது!
இதயமென்பதுதான் எழுதும்
காகிதமானது.

என் காதலர் தினப்பரிசு
இப்போதைக்கு இந்தக் காகிதப்பூ...
இதுட்தான் என் ஃகை௯... ...

நன்றி ரென்!

புதன், பிப்ரவரி 21, 2007

Once u have loved......u always will.....

There was once this guy who is very much in love with
his girl.

This romantic guy folded 1,000 pieces of paper cranes
as a gift to his girl. Although, at that time he was
just a small fry in his company, his future doesn't
seem too bright, they were very happy together. Until
one day, his girl told him she was going to Paris and
would never come back. She also told him that she
could not visualize any future for both of them, so
they went their own ways there and then...

Heartbroken, the guy pined. But when he regained his
confidence, he worked hard day and night, slogging his
body and mind just to make something of himself.
Finally with all the hard work and the help of
friends, this guy set up his own company ..



You never fail until you stop trying. One rainy day,
while this guy was driving, he saw an elderly couple
sharing an umbrella in the rain walking to some
destination. Even with the umbrella, they were
drenched. It didn't take him long to realize they were
his former girl's parents.



Wanting to get back at them, he drove slowly past the
couple, wanting them to spot him in his luxury sedan.
He wanted them to know that he wasn't the same any
more; he had his own company, car, condo, etc.



He had made it! But what he saw next confused him, the
couple were walking towards a cemetery, and so he got
out of his car and followed... Then he saw his girl, a
photograph of her smiling sweetly as ever looking at
him from her tombstone and he saw his paper cranes
right beside her...

Her parents saw him. He asked them how this had
happened.

They explained, she did not leave for France at all.
She was ill with cancer. She had believed that he
would make it someday, but she did not want to be his
obstacle... therefore she had chosen to leave him.



Just because someone doesn't love you the way you want
them to, doesn't mean they don't love you with all
they have. She had wanted her parents to put his paper
cranes beside her, because, if the day came when fate
brought him to her again...he could take some of those
back with him...



Once you have loved, you will always love. For what's
in your mind may escape but what's in your heart will
remain forever.

The guy just wept...The worst way to miss someone is
to be sitting right beside her knowing you can't have
her, see her or be with her ever again....... ..hope
you understand.

Find time to realize that there is one person who
means so much to you, for you might wake up one
morning losing that person who you thought meant
nothing to you.

வெள்ளி, பிப்ரவரி 09, 2007

கா.க - 2 (தொடர்ச்சி...)

நானும் அவளிடம் பேச நினைத்து தொடங்குவேன்... ஏதோ காரணமாக முடியாமல் போகும். இப்படியே ஒரு வாரம் கழிந்தது...

அன்று திங்கட் கிழமை என நினைக்கிறேன். வைரஸ் காய்ச்சலின் காரணமாக நான் பள்ளிக்கு 'கட்' அடித்துவிட்டு டி.வீ.யில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஏதேச்சையாக வெளியே வரும் போது என் தேவதையைக் கண்டேன். அவளும் ஏதோ காரணம் சொல்லி பள்ளிக்கு செல்லவில்லை போலும். அதான் சாக்காக வைத்து அவளிடமே கேட்டேன்

'ஹலோ, என்ன... இன்னைக்கு நீங்களும் மட்டமா?'

சில நொடி...சிந்தனைக்குப் பின்... 'ஆமாங்க.. காய்ச்சல்'

'எனக்கும் தான். ஏன்னு தெரியல நாம ரெண்டு பேருக்குமே ஒரே நேரத்துல காய்ச்சல்... ஹிஹி' - நானே தான்!

காதில் வாங்கினாலோ இல்லையோ... விருட்டென சென்றுவிட்டாள்!
----
ம்ம்ம்ம் ஐடியா... பேசாமல் லவ் லெட்டர் எழுதிக் கொடுத்தால் என்ன... என் உள்மனம் கூறியது.

மொட்டை மாடிக்கு உடனே பறந்தேன்.

எழுதினேன்... எழுதினேன்... நிறைய எழுதிப் பார்த்தேன். ஒன்னும் சரியாகப் படவில்லை.

முடிவில்...
நானும் உன் மதம் தானே (அவளின் பெயர்)
உனக்கு என்னைத் தர சம்மதமா?

' நச்'ன்னு ரெண்டே வரியில் எழுதி.... மறக்காமல் என் பெயரை எழுதாமல் மடித்து வைத்துக் கொண்டேன்.

கொடுக்கும் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தேன். வெளியே வந்தது தேவதை.

நன்றாக விளக்கி வைத்த வெண்கல சிலையென, அந்த அழகான சின்னக் கண்களில் மையிட்டு, குவிந்த புருவங்களுக்கு நடுவே புள்ளி வைத்தார்போன்ற பொட்டு... -தேவதை.

ஏனோ தெரியவில்லை, அந்த நேரத்தில் எதைப் பற்றியும் நினைக்கத் தோன்றாமல் அப்படி ஒரு தைரியம் என்னுள் எப்படி வந்ததோ தெரியாமல் நேரடியாக அவளிடம் சென்று கடித்தத்தை தந்தேன்... வந்தேன்.

பின் தான் என்ன பின் விளைவுகள் வரும் எனத் தெரியாமல் மனம் பதைக்க பதைக்க இருந்தேன். அடுத்த நாள்...அடுத்த நாள். ஒன்றும் நடக்கவில்லை. அவளின் வீட்டிலும் யாரும் இருக்கவில்லை. அவளையும் காணமுடியவில்லை.

அம்மாவிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் அவர்கள் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போனது அப்போது தான் எனக்குத் தெரிந்தது.

மனது வலித்தது. அவளுக்கும் வலித்திருக்குமோ...பின்பு ஏன் என்னிடம் ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல்.... கொள்ளாமல் (ஆனால் என் இதயத்தைக் கொன்றுவிட்டு) சென்றேவிட்டாள்??!!

செவ்வாய், பிப்ரவரி 06, 2007

ஹாங்சோவில் சுற்றுலா!



தொன்மையான 7 சீன நகரங்களில் ஹாங்சோ ஒன்றாகும். அதற்கு, மிகுந்த பண்பாட்டுப் பின்னணி உண்டு. உலகப் புகழ்பெற்ற சுற்றுலாக் காட்சி நகர் அது. அங்குள்ள சிஹு ஏரி(west lake) மையக் காட்சிப் பிரதேசத்தில் மட்டும், 100க்கும் அதிகமான புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

மனிதர் வசிப்பதற்கு ஏற்ற இடங்களில் ஒன்று ஹாங்சோ. தலை சிறந்த குடியிருப்புப் பிரதேசப் பரிசை அதற்கு ஐ. நா வழங்கியது. சர்வதேசப் பூங்கா நகரமெனவும் அது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிஹு ஏரிக் காட்சிப் பிரதேசத்தின் பரப்பளவு 60 சதுர கிலோமீட்டராகும். இங்குள்ள எழில் மிக்க ஏரிக் காட்சியும் தொல் பொருள், வரலாற்றுச் சின்னம் ஆகியவையும் ஒன்றிணைந்து, இயற்கை அழகை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஹாங்சோ நகரில் தனிச்சிறப்பு வாய்ந்த வீதிகள் அதிக அளவில் உள்ளன.

நைன்சென் வீதியானது, பொழுதுபோக்கு வீதியாகும். பான(மது)அகம், தேநீர் அகம், குழம்பி அகம் ஆகியவை இடம்பெற்றுள்ள இவ்வீதி, சீன மற்றும் மேலை நாட்டுப் பண்பாட்டுத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த வீதியாகும். இவ்வீதிக்கு எதிரே, சிஹு ஏரி (west lake) அமைந்துள்ளது.

இந்திய, தாய்.. மற்ற நாடுகளின்....உணவகங்கள்... பல இங்கே அமைந்துள்ளன.indian kitchen







இவ்வாண்டு முதல், ஹாங்சோ நகரின் சிஹு ஏரியில் இரவுச் சுற்றுலா நடவடிக்கையின் சில புதிய நிகழ்ச்சிகள் துவங்கின. எடுத்துக்காட்டாக, நீரின் மேல் படகு மூலச் சுற்றுலா, நீரின் மேல் தேநீர் விடுதி முதலிய சுற்றுலா நிகழ்ச்சிகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.



அவை வேறுபட்ட பயணிகளின் விருப்பத்தை நிறைவு செய்ய முடியும். பயணிகளின் அன்றாட பொழுதுபோக்கிற்கு இது மிகவும் பொருத்தமானது. நாள்தோறும் மாலை 6:30 மணிக்கு சிஹு ஏரி பூங்காவின் துறைமுகத்தில் 4 பொழுதுபோக்குப் படகுகள் ஒரே நேரத்தில் அனுப்பப்படும். பயணிகள் படகுகளில் ஏறி சிஹு ஏரியின் இரவுக் காட்சியைக் கண்டுகளிக்கலாம்.

விசாலமான ஏரியில், நிலாவின் பிம்பம் நீரில் தென்பட்டுப் பயணிகளுடன் இருப்பது மகிழ்ச்சி தருகின்றது. சீனாவின் நிங்பு நகரைச் சேர்ந்த பயணி hu yue கூறியதாவது, இது வர வேண்டிய ஒரு இடமாகும். இரவில் சுற்றுலா மேற்கொள்வது வேறுபட்ட உணர்வை ஏற்படுத்தும்.



மெல்லிய காற்று வீச சுற்றுப்புறத்திலுள்ள இயற்கைக் காட்சியைக் கண்டுகளிப்பதில் மிகவும் மகிழ்கின்றேன் என்றார் அவர். பயணிகள் திறந்த வாகனம் மூலம் சிஹு ஏரியைச் சுற்றிப் பார்வையிடலாம்.

இதற்கு 40 நிமிடம் தேவைப்படும். �“வியம் போன்ற எழில் மிக்க இயற்கைக் காட்சி பயணிகளை ஈர்த்துள்ளது. இளம் தென்றல் வீச தொலைவில் மின்னும் விளக்கு ஒளியும் கோபுரத்தின் நிழலும் அவ்வப்போது தென்படும்.



இதனால், நகரிலிருந்து இயற்கைச் சூழலுக்குத் திரும்பும் உணர்வு பயணிகளுக்கு ஏற்படுவது வழக்கம். தவிர, கிழக்கு சீனாவின் ஒருவகை உள்ளூர் நாடகமான yueju நாடக நடிகர்கள், வாகனத்தில் பயணிகளுக்குக் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவது,பயணிகளின் மனதில் ஆழப்பதிந்துள்ளது.

சிஹு ஏரி தவிர, ஹாங்சோ நகரில் 2006ஆம் ஆண்டின் 9வது உலக பொழுதுபோக்குப் பொருட்காட்சியகத்தின் முக்கிய இடமான பொழுதுபோக்குப் பொருட்காட்சிப் பூங்கா, பயணிகளை ஈர்க்கும் மற்றொரு காட்சித் தளம் ஆகும். சுமார் 200 ஹெக்டர் பரப்பளவுடைய இப்பூங்காவின் கட்டுமானத்தில் மொத்தம் 350 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டது.

நீல நிறமுடைய ஏரி நீரும் 10 கிலோமீட்டர் நீளமுடைய ஆற்று வழியும் இந்தப் பொழுதுபோக்குப் பொருட்காட்சிப் பூங்காவை நீர் நகரப் பகுதி, கடற்கரைப் பகுதி, ஏரிக்கரைப் பகுதி, பொழுதுபோக்குப் பகுதி ஆகிய 4 பகுதிகளாகப் பிரித்திருக்கின்றன.



அனைத்து பகுதிகளிலும் வேறுபட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. அவை தனிச்சிறப்பு மிக்கவை. கடந்த ஏப்ரல் திங்களில் பொழுதுபோக்குப் பொருட்காட்சிப் பூங்கா துவங்கப்பட்டது முதல் இதுவரை, நாள்தோறும் சுமார் பத்தாயிரம் பயணிகள் வருகை தருகின்றனர்.

படங்கள்... என் கைவண்ணம்... ஹிஹி!

வெள்ளி, ஜனவரி 26, 2007

"காதல்"

இது கவிதையல்ல , நான் கவிஞனும் அல்ல, என் உள்ள குறுகுறுப்பை கொட்டிவைக்க ஒரு இடம் தேவைப்பட்டதால் கிறுக்கிவைக்கிறேன் பைத்தியமாக...

"காதல்" இந்த ஒரு வார்தைக்கு அர்த்தம் எனக்கு பல நாள் விளங்கியதில்லை

பணத்தைவிடவா, உலக சுகத்தைவிடவா காதல் பெரிது கண்டிப்பாக இல்லை என ஆர்பரித்தது என் மனம்.

ஆமாம் பொல்லாத உடல் சுகத்துக்குதானே காதல் காதல் என்று வீழ்கிறார்கள், நூறு பௌண்டு தூக்கி எறிந்தால் பத்து பெண் கிடைப்பாள் என இருமாப்போடு இருந்தது என் ஆவி

காதல் என்பது வெறும் வேதியலே அதைத்தவிர ஒன்றுமே இல்லை என அறிவியல் பேசியது என் மூளை

காதல் வெறும் கத்திரிக்காய் என்பவர்களுடன் கூட்டணி வைத்தது என் உணர்வு

பெண்களிடம் அப்படி என்னதான் இருக்கு? அப்படியே இருந்தாலும் காசு குடுத்தா கிடைக்கப்போகுது என மமதையோடு பேத்தியது என் வாய்

தத்துவஞாணிகளால் கூட தகர்க்க முடியாத என் இந்த எண்ணத்தை, என்னவள் தகர்த்து பொடியாக்கி ஊதித்தள்ளிவிட்டாளே

காதல் எனும் நோய் என்னையும் பீடித்துவிட்டதே. இப்படியாகும் என நான் கணவிலும் நினைக்கவில்லையடி.

காதலிக்கும் சுகத்தை திரைப்படம் கூட எனக்கு உணர்த்தியுள்ளது. அதை நான் உணராதவன் அல்ல

மெய்யாய் காதலிக்கப்படும் போதையை நீதான் கள்ளி எனக்கு கொடுத்தாய். அதை உணர்த்திய முதல் உயிர் நீதானடி

என்னை நினைத்து இரவில் தூங்கவில்லை என்று சொல்கிறாள். அதைக்கேட்டு நான் பல இரவு தூங்கவில்லையடி

நான் இல்லாமல் வாழ்கையில்லை என்றாள். என் வாழ்விற்கு மதிப்பை கூட்டிவிட்டாய், எந்த ஆயுள்காப்பீடு அதற்கு போதுமடி?

அவளை அவள் தாய் செல்லமாய் கிள்ளினாள் எனக்கு வலித்தது எப்படி? விஞாணத்தை போய்க்கவைக்கும் சக்தி காதலுக்கு மட்டும் உண்டோ?

அபினும், கஞ்சாவும் போதைப்பொருளாம் அதைபார்த்து கைகொட்டி சிரிக்கிறேன், என்னவளைவிடவா? தடைசெய்யக்கூடாத கேடுசெய்யாத அற்புத போதை உன்னைவிட்டால் உலகில் எனக்கேது

எனக்காக கோவிலில் வேண்டிக்கொண்டதாய் சொன்னாள். தெய்வமெல்லாம் ஒன்றுமில்லையென்றேன். அப்படி சொல்லக்கூடாது என என் காதைத்திருகினாள், அந்த இன்ப வலியில் உணர்ந்தேன் என் தெய்வமே நீதானடி.

தூங்கி எழுந்த கண்களுடனும், கலைந்த தலையுடனும், கசங்கிய ஆடையுடனும், அலங்காரம் ஒன்றுமே இல்லாமல் விடிகாலையில் ஒரு நாள் உன்னை பார்த்தேன். அப்போதும் நீ எனக்கு அழகாய் தெரிவதெப்படி? இதுதான் உண்மை அன்பின் வீரியமோ

நான் எந்த ஆடை போட்டால் உனக்கு பிடிக்கும் எனறு ஆவலாய் கேட்டேன். நீங்கள் போட்டால் எந்த ஆடையும் பிடிக்கும் என்ற அந்த பதிலை நான் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லையடி. என்னை நான் உணர்ந்ததே அன்றுதானடி

இரு உயிரை ஒரு உயிராய் மாற்றும் சக்தி தெய்வத்துக்கு கூட இல்லயே காதலுக்கு எப்படி வந்தது

என்னவள் தேவதை இல்லை காரணம் என் காதலிக்கு நிகர் அந்த தேவதை கூட இல்லை. உன்னைவிட எனக்கு அந்த தேவதை கூட அழகில்லையடி

தம் அலுவல் பணிகளை என் நினைவால் சரியாய் செய்ய முடியவில்லை என என்னிடமே பூகார் கூறுகிறாள் கள்ளி நான் உன்னிடம் அந்த புகாரை கூறவில்லை அவ்வளவுதானடி வித்தியாசம்

காதல் எனும் சொல்லின் மீது எனக்கு இன்றும் மதிப்பில்லை. என்னவளால் அந்த காதல் எனும் சொல்லிற்கு வந்தது மதிப்பு!!

மணநாளுக்கு இன்னும் ஐந்து மாதம் காத்திருக்க வேண்டுமா? ஏசு இன்னும் ஐந்து மாதம் முன்னே பிறந்திருக்கக்கூடாதா? இன்றே மணநாளாக இருக்குமே

கண்ணை மூடினால் உன் புன்னகை தவழும் முகம் மட்டும்தான் தெரிகிறது.

நிசப்தம் நிறைந்தால் உன் சிரிப்பொலி மட்டும்தான் கேட்கிறது.

எந்த பூவை முகர்ந்தாலும் அதில் உந்தன் வாசம் மட்டும்தான் வருகிறது

எப்போதோ முடிவெடுத்துவிட்டேன் வாழ்கையென்றால் அது உன்னோடுதான் உன்னோடு மட்டும்தான்.

நூறு கோடி கொடுத்தாலும் வேறொருவளை உனக்கீடாக என்னால் இனி கனவில் கூட நினைக்க முடியாது.

கோடி உலக அழகிகள் அணிவகுத்தாலும் அதிலும் என் கண்கள் என்னவளை மட்டும்தான் தேடும்

இப்போதுதான் உணர்கிறேன் காதலின் வீரியத்தை

- மிக்க நன்றி ஆனந்த்...!