வெள்ளி, ஜனவரி 26, 2007

"காதல்"

இது கவிதையல்ல , நான் கவிஞனும் அல்ல, என் உள்ள குறுகுறுப்பை கொட்டிவைக்க ஒரு இடம் தேவைப்பட்டதால் கிறுக்கிவைக்கிறேன் பைத்தியமாக...

"காதல்" இந்த ஒரு வார்தைக்கு அர்த்தம் எனக்கு பல நாள் விளங்கியதில்லை

பணத்தைவிடவா, உலக சுகத்தைவிடவா காதல் பெரிது கண்டிப்பாக இல்லை என ஆர்பரித்தது என் மனம்.

ஆமாம் பொல்லாத உடல் சுகத்துக்குதானே காதல் காதல் என்று வீழ்கிறார்கள், நூறு பௌண்டு தூக்கி எறிந்தால் பத்து பெண் கிடைப்பாள் என இருமாப்போடு இருந்தது என் ஆவி

காதல் என்பது வெறும் வேதியலே அதைத்தவிர ஒன்றுமே இல்லை என அறிவியல் பேசியது என் மூளை

காதல் வெறும் கத்திரிக்காய் என்பவர்களுடன் கூட்டணி வைத்தது என் உணர்வு

பெண்களிடம் அப்படி என்னதான் இருக்கு? அப்படியே இருந்தாலும் காசு குடுத்தா கிடைக்கப்போகுது என மமதையோடு பேத்தியது என் வாய்

தத்துவஞாணிகளால் கூட தகர்க்க முடியாத என் இந்த எண்ணத்தை, என்னவள் தகர்த்து பொடியாக்கி ஊதித்தள்ளிவிட்டாளே

காதல் எனும் நோய் என்னையும் பீடித்துவிட்டதே. இப்படியாகும் என நான் கணவிலும் நினைக்கவில்லையடி.

காதலிக்கும் சுகத்தை திரைப்படம் கூட எனக்கு உணர்த்தியுள்ளது. அதை நான் உணராதவன் அல்ல

மெய்யாய் காதலிக்கப்படும் போதையை நீதான் கள்ளி எனக்கு கொடுத்தாய். அதை உணர்த்திய முதல் உயிர் நீதானடி

என்னை நினைத்து இரவில் தூங்கவில்லை என்று சொல்கிறாள். அதைக்கேட்டு நான் பல இரவு தூங்கவில்லையடி

நான் இல்லாமல் வாழ்கையில்லை என்றாள். என் வாழ்விற்கு மதிப்பை கூட்டிவிட்டாய், எந்த ஆயுள்காப்பீடு அதற்கு போதுமடி?

அவளை அவள் தாய் செல்லமாய் கிள்ளினாள் எனக்கு வலித்தது எப்படி? விஞாணத்தை போய்க்கவைக்கும் சக்தி காதலுக்கு மட்டும் உண்டோ?

அபினும், கஞ்சாவும் போதைப்பொருளாம் அதைபார்த்து கைகொட்டி சிரிக்கிறேன், என்னவளைவிடவா? தடைசெய்யக்கூடாத கேடுசெய்யாத அற்புத போதை உன்னைவிட்டால் உலகில் எனக்கேது

எனக்காக கோவிலில் வேண்டிக்கொண்டதாய் சொன்னாள். தெய்வமெல்லாம் ஒன்றுமில்லையென்றேன். அப்படி சொல்லக்கூடாது என என் காதைத்திருகினாள், அந்த இன்ப வலியில் உணர்ந்தேன் என் தெய்வமே நீதானடி.

தூங்கி எழுந்த கண்களுடனும், கலைந்த தலையுடனும், கசங்கிய ஆடையுடனும், அலங்காரம் ஒன்றுமே இல்லாமல் விடிகாலையில் ஒரு நாள் உன்னை பார்த்தேன். அப்போதும் நீ எனக்கு அழகாய் தெரிவதெப்படி? இதுதான் உண்மை அன்பின் வீரியமோ

நான் எந்த ஆடை போட்டால் உனக்கு பிடிக்கும் எனறு ஆவலாய் கேட்டேன். நீங்கள் போட்டால் எந்த ஆடையும் பிடிக்கும் என்ற அந்த பதிலை நான் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லையடி. என்னை நான் உணர்ந்ததே அன்றுதானடி

இரு உயிரை ஒரு உயிராய் மாற்றும் சக்தி தெய்வத்துக்கு கூட இல்லயே காதலுக்கு எப்படி வந்தது

என்னவள் தேவதை இல்லை காரணம் என் காதலிக்கு நிகர் அந்த தேவதை கூட இல்லை. உன்னைவிட எனக்கு அந்த தேவதை கூட அழகில்லையடி

தம் அலுவல் பணிகளை என் நினைவால் சரியாய் செய்ய முடியவில்லை என என்னிடமே பூகார் கூறுகிறாள் கள்ளி நான் உன்னிடம் அந்த புகாரை கூறவில்லை அவ்வளவுதானடி வித்தியாசம்

காதல் எனும் சொல்லின் மீது எனக்கு இன்றும் மதிப்பில்லை. என்னவளால் அந்த காதல் எனும் சொல்லிற்கு வந்தது மதிப்பு!!

மணநாளுக்கு இன்னும் ஐந்து மாதம் காத்திருக்க வேண்டுமா? ஏசு இன்னும் ஐந்து மாதம் முன்னே பிறந்திருக்கக்கூடாதா? இன்றே மணநாளாக இருக்குமே

கண்ணை மூடினால் உன் புன்னகை தவழும் முகம் மட்டும்தான் தெரிகிறது.

நிசப்தம் நிறைந்தால் உன் சிரிப்பொலி மட்டும்தான் கேட்கிறது.

எந்த பூவை முகர்ந்தாலும் அதில் உந்தன் வாசம் மட்டும்தான் வருகிறது

எப்போதோ முடிவெடுத்துவிட்டேன் வாழ்கையென்றால் அது உன்னோடுதான் உன்னோடு மட்டும்தான்.

நூறு கோடி கொடுத்தாலும் வேறொருவளை உனக்கீடாக என்னால் இனி கனவில் கூட நினைக்க முடியாது.

கோடி உலக அழகிகள் அணிவகுத்தாலும் அதிலும் என் கண்கள் என்னவளை மட்டும்தான் தேடும்

இப்போதுதான் உணர்கிறேன் காதலின் வீரியத்தை

- மிக்க நன்றி ஆனந்த்...!

கருத்துகள் இல்லை: