திங்கள், நவம்பர் 27, 2006

காதல் கல்வெட்டுகள் - 2

முதலில், அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!
--------------
அது ஒரு கோடைக்காலம்... பள்ளித் தேர்வுகள் எல்லாம் முடிந்து சிறைப் பறவைகளாகிய நாங்கள் சிறகடித்து விண்ணில் பறக்கக் காத்திருக்கும் தருணம்.

நாமும் அந்த காலத்திற்கு செல்வோமா?

இன்று கடைசித் தேர்வு... வரலாறு-புவியியல். வாழ்க்கையிலேயே எனக்கு ரொம்பப் பிடித்த, பத்தி பத்தியாக கதை எழுதும் தேர்வு. வழக்கமாக அறிவியல் தேர்வு முடிந்தால் எல்லாம் முடிந்து விட்ட ஒரு திருப்தி.
வழக்கம் போல ஒன்னுமே படிக்காமல், கொஞ்சம் கூட நோகாமல், நல்லா தூங்கி எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் நல்ல ஒரு குளியல் போட்டுவிட்டு, சூடான பொங்கல்...தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டுவிட்டு என் செல்ல சைக்கிளை மெல்ல மிதித்து பள்ளிக்கு பயணிக்க ஆரம்பித்தேன்!

அட.. என்னங்கடா இது வழியில் பார்க்கும் ஈசல்கள் எல்லாமே அழகாகத் தெரிகிறது இன்னைக்கு....ஹிஹி!

தெரு முனையைக் கடந்து சாலையைத் தொடும் அந்த வேளை...
இரு விண்மீன் களை பதித்து செய்த மின்னலடிக்கும் கண்களைக் கொண்ட ஒரு நிலாப் பெண் என் கண்களுக்குள் நுழைத்து...இதயம் வரைக்கும் ஊடுறுவது எனக்கு நன்றாகவே தெரிந்தது...!

இதுக்கு மேலே என் கால்கள் நகர மறுத்தன... கைகளும் ப்ரேக் பிடிக்க மறுத்ததால், சைக்கிள் சென்று கொண்டே இருந்தது, என் மனம் என்னைவிட்டு எப்போதோ பறந்து போயிருந்த்து!

தேர்வு எழுதினேனோ இல்லையோ, சீக்கிரமாகவே வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.
எங்கே அந்த தேவதை? எங்கே அந்த பொற்சிலை? எங்கள் தெருவைச் சுற்றி தேடித் தேடி ஒரு பத்து சுற்றாவது சுற்றியிருப்பேன். கிடைக்கவில்லை!

கண்கள் திறந்த பார்த்த பொழுது மணி ஆறைத் தொட்டிருந்தது!... வாசலில் என் நண்பன் குரல்.

'டேய் மாம்ஸ்...இன்னைக்கு காலையில ஒரு தேவதையை பார்த்தேன்டா நம்ம தெருக் கோடியில. யாராச்சும் புதுசா குடி வந்திருக்காங்களா?'

'அடப்பாவி, உன் கண்ணுக்கு மட்டும் எப்படிடா இதெல்லாம் கரெக்டா மாட்டுது? எனக்குத் தெரியலை... யாருன்னு பார்க்க்லாம் வா'

இருவரும் அப்படியே பேசிக் கொண்டே வெளியே நடந்தோம்.

அதே நிலாப்பெண்... தன் குட்டித் தம்பியுடன் எங்களை க்ராஸ் செய்து சென்றது. 'மச்சி அவ தான்டா..' 'அந்த தேவதை...'

'ஆமான்டா.. நான் இப்பத்தான் பார்த்தேன், யாரா இருக்கும்..'

ஒல்லிக்குச்சி உடம்புக்காரி பாடலில் வரும் அதே பெண்போல சாயல்... மஞ்சள் நிற பாவாடை சட்டையில்...இரட்டைப் பின்னல் சடை,,,
அவளின் ஓட்டத்துடன் கலந்த நடையில் ஒயிலாட்டம் ஆட, நான் அப்படியே மெய் மறந்து அங்கே நின்றேன்!

'அக்கா.... அக்க்கா..' - கத்திக் கொண்டே ஒரு சிறுவன்... ஆமாம் இவன் நேற்று வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பொறை மோர் வாங்கிச் சென்றானே...

ஓ... அப்போது தான் நினைவுக்கு வந்தது. எங்கள் வீட்டுக்கு இருவீடு தாண்டி இருக்கும் வீட்டுக்கு புதுசா வந்தவங்க தானா...இது...!
-------------------

ஒரு நாளைக்கு எப்படியாச்சும் ஒரு முறையாவது அவளை நான் பார்த்துவிடுவேன்.

இன்னைக்கு எப்படியாச்சும் அவளிடம் பேசிடனும் என நினைத்துக் கொண்டு வெளியே நடந்தேன். சொல்லி வைத்தது போல அவளே நேரில் வந்து கொண்டிருந்தாள்.

உள் மனம் ...படபட வென அடித்துக் கொண்டிருந்தது!

மீரா சீயக்காய் போட்டு தலைக் குளித்திருப்பால் போலும்... என்னே ஒரு நறுமணம்... பட்டுக்கூந்தல் காற்றில் ஆட என் முன்னே நிஜ தேவதை...

'ஹலோ, ஆன்டி இருக்காங்களா?'
(மனசுக்குள் : அடிப்பாவி...அதுக்குள்ள உனக்கு ஆன்டி ஆகிட்டாங்களா... அம்பளை நானே இன்னும் முடிவு பண்ணல...)

என்ன ஒரு இனிமையான ராகத்துடன் கூடிய குரல். பாடினா காதில் இன்பத்தேன் வந்து பாயுமே...!

அது ஏன் தமிழ்பெண்கள் யாரும் பெரிய பாடகராக ஆக முடிவதில்லை...?!! சரி சரி, நான் எப்படியும் ஒரு நாள் பெரிய இசையமைப்பாளரா ஆகத்தானே போறேன். அப்ப என் மனைவிக்கு (என் தேவதை) சான்ஸ் கொடுக்காமல் வேற யாருக்கு கொடுக்கப் போறேன்... ஹிஹி!

'இல்லீங்க...அது வந்து... ஆமா... இருக்காங்க...உள்ள இருக்காங்க' தட்டுத் தடுமாறி உளறிக் கொண்டிருந்தேன்.

அதையெலாம் பொருட்படுத்தாமல் விறுட்டென மின்னல் உள்ளேயே போய் விட்டது!

எப்படியும் திரும்பி வருமே.... அப்போது எப்படியும் பேரைக் கேட்டு விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த போது... அம்மாவின் குரல் 'டேய், கடைக்குப் போய் கொஞ்சம் பூண்டு வாங்கிட்டு வந்துடுடா...'

-தொடரும்..

செவ்வாய், நவம்பர் 14, 2006

இனிதே ஆரம்பம்!


Thanks: Saravanan-malar

குளிரினால் இறந்து கொண்டிருக்கும் புற்களின்நடுவில் காலை பனியை சுமந்து இன்னும் உயிருடன்சில பச்சை புற்கள்

நீண்ட துயில் களைந்து,பொன்நிற ஒளிக்கற்றைகளால் இருட்டை கிழித்துதன் பணியை இனிதே தொடங்கி கொண்டிருக்கும்அதி காலை கதிரவன்.

கண்ணுக்கு இனிய இளம் சிவப்பு நிறத்தில்அரிதாரம் பூசியது போல் fall-ன் வரவை காட்டும்maple மரங்கள்

ஒளியை ஒளித்து கொண்டஅடர்ந்த மூடுபனி

பற்கள் தந்தியடிக்க,ஜில் என்று முகத்தை நனைக்கும்அதிகாலை குளிர் காற்று

வாகனத்தை நிருத்தி சாலையை கடக்கவழி தந்த அமெரிக்கனின்சிரிய புன்னகை

தொலைபேசியில் அம்மாவிடம் பெசியஅந்த இரண்டு மணித்துளிகள்

ஆள் இல்ல சாலையில்அலுவலகத்திற்கு நடந்து செல்லும் போதுவிருப்பமனவர்களிடம் செலவளித்ததருனங்களை அசை போட்டுகொண்டுஏங்கும் மனது

இதொ.. அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கிரேன்இன்னும் ஒரு நாள்..இன்னும் ஒரு வாரம்இனிதே ஆரம்பம்....

இந்த நாள் வருங்காலத்தில்நினைத்து பார்க்க நல்ல பலஇனிய நினைவுகளை தரும்என்ற நம்பிக்கயில்....