தீபாவளித் திருநாள்!
வரவேற்போம்..வரவேற்போம்
வாழ்த்துக்கள் கூறி வரவேற்போம்....
தீபங்கள் ஏற்றி வரவேற்போம்
இன்பத் தீபாவளி திருநாளை வரவேற்போம்.....
இன்னல்கள் தீர்ந்திடவே..இருள் நீக்கி ஒளி பிறந்திடவே
இருகரம் கூப்பி இன்முகம் காட்டி வரவேற்போம்...
புத்தாடை உடுத்தி, புது நெல்லுச் சோறாக்கி
பட்டாசும் கொளுத்தி, பண்டிகையை வரவேற்போம்...
தித்திக்கும் இனிப்புப் பலகாரம், நாவினிக்க..தேன்குழலும்
ஒட்டு மொத்தமாய் சுவைத்திட பக்குவமாய் அம்மா தந்திடுவாள்....
நம்மை வாட்டும் துன்பமெல்லாம் தீர்ந்திடவே
நாமெல்லாம் சென்றிடுவோம் ஆலயமே...
உற்றார், உறவுகள் கூடி மகிழ்ந்திட்டு நல்ல
பல கதைகள் சொல்லி மகிழ்ந்திடுவோமே....
வாழ்த்துக்கள் பல கூறி வாழ்ந்திடுவோம் நாமிங்கே
ஆசிகள் பல பெற்று ஆனந்தமாய்க் களித்திடுவோம்...
என்நாளும் எதிர்பார்த்து என் கண்கள் உனைப் பார்த்து
வருவாய் அருள் தருவாய் இன்பத் தீபாவளித் திருநாளே.
நன்றி: தனிமதிக்கா
3 கருத்துகள்:
நல்லா இருக்கு சராஜ்..! கலக்கிரீங்க..!
நன்றி பூக்குட்டி...!
வணக்கம் சரஜ் உங்கள் வலைப்பூ நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.....
கருத்துரையிடுக